இந்திய அணிக்காக மூன்றுவகை ஐ.சி.சி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. அவரது ஓய்வு குறித்த விவாதம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக உலக கோப்பை தொடருக்கு பின்னர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனால் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிர்மானி தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி தற்போது ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது. அவருக்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் சஹா சிறப்பாக விளையாடி வந்தாலும் காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போனது.
அவருக்கு பதிலாக இந்திய அணியில் பண்ட் இடம் பிடித்து இரண்டு சதங்களை விளாசி இருந்தாலும் அவர் சிறுபிள்ளைத்தனமாக விளையாடுகிறார். அவர் திறமையான வீரர்தான் இருப்பினும் பொறுப்புடன் ஆட வேண்டும். அவரது ஷார்ட் தேர்வுகள் அனைத்தும் தவறாக உள்ளது. எனவே அவர் அதனைப் புரிந்துகொண்டு தனது ஆட்டத்தின் போக்கை மாற்ற வேண்டும். மேலும் டோனி ஓய்வு பெறுவதற்கு முன்னர் அடுத்த விக்கெட் கீப்பரை தயார் செய்வது அவசியம்.

எனவே அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் விக்கெட் கீப்பிங் நுணுக்கங்களையும் அவருக்குக் கற்றுத் தர வேண்டும். அதன் பின்னரே தோனி ஓய்வு பெற வேண்டும் அப்போதுதான் இந்திய அணிக்கு நீண்டகால விக்கெட் கீப்பர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போது பண்ட் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை அவருக்கு வாய்ப்பின் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும் என்றும் கிரண் மோரே கூறியது குறிப்பிடத்தக்கது.



