தோனியின் பெயரை பெறுவது மட்டுமல்ல. தோனியையும் இவர் விரைவில் மிஞ்சிடுவார் – கிரண் மோரே கருத்து

Pant

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். அவரின் இந்த சிறப்பான செயல்பாட்டை பாராட்டி கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய முன்னாள் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான கிரன் மோரே ரிஷப் பண்ட்டை மகேந்திரசிங் தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

pant 2

ரிஷப் பண்ட் இதுவரை இந்தியாவை தவிர்த்து இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது தொடக்க தொடரே இங்கிலாந்து மண்ணில் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் சதத்தை அங்கே அவர் பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவில் தனது பேட்டிங் ஆவரேஜ் அதிக அளவில் வைத்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சிட்னி மற்றும் காபா போட்டிகளில் இரண்டாவது இன்னிங்சில் இறங்கி அதிரடி காட்டினார்.

அதே அதிரடியை தற்பொழுது இங்கு இந்திய மண்ணிலும் இரண்டாவது இன்னிங்சில் இறங்கி இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்துள்ளார். இவர் இந்திய மண்ணில் அடிக்கும் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய கிரன் மோரே பண்டின் சாதனை அவ்வளவு எளிதில் அமைக்கப்பட்டது அல்ல. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் ரிஷப் பண்ட் மேற்கொண்ட கடினமான பயிற்சியும் உழைப்பையும் சமீபத்தில் கூறியுள்ளார்.

Pant

அவர் கூறியது போல ரிஷப் பண்ட் தன்னை நாளுக்கு நாள் முன்னெடுத்து கொண்டு செல்கிறார். பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் தன் பணியை சரியாகச் செய்து வருகிறார். இதே போல் இன்னும் கொஞ்சம் காலம் கஷ்டப்பட்டு பயிற்சியை மேற்கொண்டு அனைத்து வித கிரிக்கெட் பிட்ச்சுகளிலும் இதேபோல் நன்றாக பெர்ஃபார்ம் செய்துவந்தால் கூடிய சீக்கிரம் மகேந்திர சிங் தோனியின் பெயரை வாங்கிவிடுவார். அப்படி கூறுவதைவிட மகேந்திர சிங் தோனியை மிஞ்சி விடுவார் என்று கூறலாம் என்று கிரண் மோர் கூறி முடித்தார்.

- Advertisement -

Pant

ஆரம்ப காலகட்டங்களில் தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்டை இந்திய ரசிகர்கள் கிண்டலடித்து வந்தது அனைவரும் அறிவர். தற்பொழுது தனது சிறப்பான ஆட்டத்தால் நற்பெயரை வாங்கியதோடு மட்டும் இல்லாமல் தோனியுடன் தன்னை ஒப்பிட்டு பேசும் அளவுக்கு முன்னேறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.