தோனி பத்தி கங்குலிகிட்ட சொல்லி புரியவைக்கவே 10 நாள் ஆயிடுச்சி – கிரண் மோரே பகிர்ந்த தகவல்

More

உலகிலேயே தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கிய மகேந்திர சிங் தோணியை இந்திய அணிக்கு தேர்வு செயவதற்காக அப்போதைய கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியை, பத்து நாட்கள் சமாதப்படுத்த வேண்டி இருந்தது என்ற சுவாரஸ்யாமான தகவல் ஒன்றை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார் இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் சேர்மேனாக இருந்த கிரன் மோர். அதைப் பற்றி கூறிய அவர், 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்குப் பிறகு, அதுவரை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த ராகுல் ட்ராவிட்டிற்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் நாங்கள் ஆர்வமாக இருந்தோம்.

Dhoni 2

அப்போது கிரிக்கெட் விளையாட்டின் தன்மையும் மொத்தமாக மாறி வந்ததால், 5வது அல்லது 6வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடக்கூடிய ஒரு வீரர் இந்திய அணிக்கு தேவைப்பட்டார். அப்போது என்னுடையை நண்பர் ஒருவர் மூலமாக தெரியவந்தவர் தான் மகேந்திர சிங் தோணி. எனவே அவர் விளையாடும் ஒரு துலீப் ட்ராபி போட்டியை நேரில் பார்ப்பதற்காக சென்றேன் என்று கூறிய கிரன் மோர். அந்த போட்டிக்கு பின்பு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் கூறியுள்ளார்.

- Advertisement -

அந்த போட்டியில் தோணியின் அணி 170 ரன்கள் அடித்திருந்தது. அதில் தோணியின் ஸ்கோர் மட்டும் 130ஆக இருந்தது. எனவே சவுரவ் கங்குலியிடம் அந்த ஆண்டு துலீப் ட்ராபி தொடரின் இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோணியே விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். ஆனால் கங்குலிக்கோ, தேஸ்குப்தாவை விக்கெட் கீப்பிங் செய்ய வைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்ததால், அதனை அவர் மறுத்து விட்டார். இதனால் அவரை நான் பத்து நாட்கள் சமாதானபடுத்த வேண்டி இருந்தது. அதற்குப் பிறகு தோணியே விக்கெட் கீப்பராக செயல்படட்டும் என்ற முடிவை எடுத்தார் கங்குலி.

Dhoni

அந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய தோணிக்கு, 2004ஆம் கென்யாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடருக்கான இந்தியா A அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தொடரில் இந்தியா A, பாகிஸ்தான் A மற்றும் கென்யா ஆகிய அணிகள் மோதின. அதிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோணி, அதற்குப் பிறகு இந்திய அணிக்காக என்ன செய்தார் என்ற வரலாற்றை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லையென்று நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

- Advertisement -

2004ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த முத்தரப்பு தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய தோணி, அந்த தொடரில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து அசத்தி, அப்போதைய இந்திய அணியின் கேப்டனான சவுரவ் கங்குலியின் நம்பிக்கையைப் பெற்றார். அதற்கு முன்பு வரை தனது சொந்த மாநில மற்றும் இந்தியாவிற்காக ஏற்கனவே விக்கெட் கீப்பிங் செய்த வீரராக இருந்த தீப் தேஷ்குப்பாதவையே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யும் நோக்கத்தில் கங்குலி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement