தோனியை இந்திய அணிக்கு கீப்பராக தேர்வு செய்தது இதற்காகத்தான் – கிரண் மோரே பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் சிறந்த கேப்டனான எம்.எஸ் தோனி விக்கெட் கீப்பராக உருவெடுத்தது பற்றி அப்போதைய தேர்வுக் குழு தலைவராக இருந்த கிரண் மோர் கூறியுள்ளார். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன், சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் சிறந்த ஃபினிஷர் என்றே தோனியை போற்றிடலாம். 2004 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

Dhoni-1

- Advertisement -

இந்திய அணி தோனியின் தலைமையில் 2007 ஐசிசி வேர்ல்டு t20, 2010 மற்றும் 2016 ஆண்டு ஆசிய கோப்பை, 2011 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிகளை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாக இருந்து 2010, 2011 ,2018 சீசனில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக எம்எஸ் தோனி ஷாக் கொடுத்தார்.

தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த கிரண் மோர் தோனி இந்திய அணியில் எவ்வாறு தேர்வானார் என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில் “ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 75 ஆட்டங்களில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். டிராவிட்டுக்கு ஓய்வு கொடுப்பதற்காக விக்கெட் கீப்பரை தேடிக் கொண்டிருக்கும்போது தோனியை பற்றி அறிந்தோம்.

கிரிக்கெட்டில் தோனியின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதனால் கென்யா அணிக்கு எதிராக சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ அணிக்காக தேர்வு செய்து அனுப்பி வைத்தோம். அந்த சுற்றுப்பயணத்தில் தோனி தனது அதிரடி ஆட்டத்தை காட்டி 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அப்போது இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார்கள்.

Dhoni

அதன்பின் தோனி இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக உருவெடுத்தார். இதன் காரணமாக இந்திய அணியில் தோனியை தேர்வு செய்தோம்.அதன்பின் அவர் இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறினார்” என்று கிரண் மோர் கூறியுள்ளார்.

Advertisement