இவர் பேட்டிங்கில் நான் அப்படியே சச்சினை பார்க்கிறேன். 20 வயது இந்திய வீரரை புகழ்ந்த – கிரண் மோரே

இந்திய அணிக்காக கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானவர் இளம் வீரர் பிரித்வி ஷா. தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்ற தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தார் ப்ரித்வி ஷா.

அனால் எதிர்பாரா விதமாக பயிற்சி ஆட்டத்தின் போது காயம் அடைந்து மீண்டும் இந்தியா திரும்பினார். எனவே அவரால் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை அதற்கு அடுத்த தொடர்களிலும் காயம் காரணமாக இடம் பெற முடியாமல் போன ப்ரித்வி ஷா மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று நினைத்தபோது சையது முஷ்டாக் அலி டிராபிக்கு முன்னர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடைபட்டு மீண்டும் இந்திய அணியில் திரும்பும் வாய்ப்பை இழந்து சில மாதங்கள் கிரிக்கெட் இல்லாமல் இருந்தார்.

அதன் பின்னர் தற்போது சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதியில் மும்பை அணியில் இணைந்த அவர் சிறப்பாக விளையாடினார். மேலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி போட்டியில் 174 பந்துகளில் 200 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவரது பேட்டிங் குறித்து இந்திய அணியின் முதன்மை தேர்வுக்குழு நிர்வாகியான கிரண் மோரே பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Prithvi

அதில் அவர் கூறியதாவது : நான் எப்பொழுதெல்லாம் ப்ரித்வி ஷாவின் பேட்டிங்கை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் எப்படி ஆடினாரோ அதுவே ஞாபகம் வருகிறது. அவரின் பயமற்ற பேட்டிங் அப்படியே ப்ரித்வி ஷாவிடம் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் டெண்டுல்கர், லாரா, ப்ரித்வி ஷாவும் ஆடுகிறார்.

- Advertisement -

prithvi-shaw

நிச்சயம் இவர் சச்சினை போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக வருவார். சச்சின் எப்படி பந்துவீச்சாளர்களை எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் பயமின்றி அடித்து நொறுக்கினாரோ அதனை போன்ற ஒரு ஆட்டம் ப்ரித்வி ஷாவிடம் இருந்து வெளிவரும் அவரின் வளர்ச்சியைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று கிரண் மோரே பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.