இங்கிலாந்து தொடருக்கு பின்னர் இந்திய அணிக்கு புதிய கேப்டன். கோலி டெஸ்டுக்கு மட்டும் தான் – கிரண் மோரே தகவல்

Kiran
- Advertisement -

இந்திய அணியில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மூன்று வகையான கிரிக்கெட் அணிக்கும் விராட்கோலி கடந்த பல ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கோலியின் தலைமையில் இந்திய அணி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வந்தாலும் ஐசிசி கோப்பையை மற்றும் கைப்பற்றவில்லை என்ற குறை மட்டும் தொடர்ந்து அவர்மீது இருந்து வருகிறது.

Kohli-2

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் மற்ற வெளிநாட்டு அணிகளைப் போன்று ஸ்பிலிட் கேப்டன்சி அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஒரு கேப்டனும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்க்கு இன்னொரு கேப்டனும் இருப்பார்கள் அதுபோன்ற நடைமுறை வர வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரான கிரண் மோரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது :

இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்காக தயாராகி வருகிறது. இந்த சுற்றுப் பயணம் முடிந்த பின்னர் நிச்சயம் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக மட்டும் கோலி நீடிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : உலக அளவில் பல அணிகள் டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டனும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என பிரித்து வைத்துள்ளது.

Kohli

இதன்மூலம் கேப்டன்கள் எந்தவிதமான பணிச்சுமையும் இன்றி அவர்களது ஆட்டத்தையும் எளிமையாக விளையாட முடியும் என்பதால் இந்த நடைமுறை கையாளப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், இயான் மோர்கன் ஆஸ்திரேலிய அணியில் பின்ச், பெயின் என தனித்தனியே கேப்டன்கள் செயல்பட்டு வருகின்றனர். அதைப் போன்று இந்திய அணிக்கும் இரண்டு கேப்டன்கள் நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

rohith

இந்திய அணி கடந்த ஆண்டு பெரும்பகுதி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. கொரோனா காரணமாக அதிக தொடர்களை இந்திய அணி தவற விட்டதால் இனி வரும் காலங்களில் அதிக கிரிக்கெட் தொடர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பணிச்சுமையை குறைக்க நிச்சயம் இந்த இரண்டு கேப்டன்சி நடைமுறை உதவும் என்பதால் இந்திய நிர்வாகம் அந்த முடிவை எடுக்கும் என கிரண் மோரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement