தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சச்சினின் சாதனையை முறியடிக்கவுள்ள கிங் கோலி – கிரேட் சார் நீங்க

Kohli-2
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. ஏற்கனவே நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில் இன்று உள்ளூரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோதுகிறது. இந்த தொடர் பல இந்திய வீரர்களின் மாண்பையும் இந்திய அணியின் இழந்த மாண்பையும் மீட்கும் விதமாக அமையும் என்றே கூறலாம்.

Practice

ஏனெனில் இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெற்ற இரண்டு தொடரில் தோல்வி அடைந்தது. அதனை தாண்டி இந்திய கேப்டன் விராட் கோலி கடுமையாகச் சொதப்பினார். அவரிடம் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் இல்லை .

- Advertisement -

மேலும் கடந்த 22 இன்னிங்ஸ்களாக அவர் சதங்கள் எடுக்கவில்லை. குறிப்பாக ஐந்து முதல் ஆறு போட்டிக்கு ஒரு முறை சதமடித்து வந்த அவர் கடந்த சில மாதங்களாக சதங்கள் விளாசவில்லை.
இதுவரை 70 சதங்கள் விளாசிய விராட் கோலி வெகு சீக்கிரத்தில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kohli 3

இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்றைய போட்டியில் சதம் விளாசினால் 71 சதம் என்ற நிலைக்கு வரும் இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடிப்பார். மேலும் தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் 11,867 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 133 ரன்கள் விளாசினால் 12 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சச்சின் டெண்டுல்கர், சங்கக்கரா, ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா மற்றும் ஜெயவர்தனே ஆகிய ஐந்து வீரர்கள் மட்டுமே 12 ஆயிரம் ரன்ங்களுக்கு மேல் அடித்து உள்ளனர். இந்த போட்டியில் 133 ரன்கள் அளிக்கும் பட்சத்தில் 12000 ரன்கள் என்ற சாதனையை படைப்பார் கோலி. சச்சினுக்கு அடுத்தபடியாக இதனை செய்யும் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும்.

Sachin

இந்த தொடரில் 3 போட்டிகள் இருப்பதால் நிச்சயம் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று நிச்சயம் நம்பலாம்.

Advertisement