- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலியின் பட்டம் இறந்துடுச்சு.. இனிமேல் அவர் தான் இந்தியாவின் புதிய கிங்.. விராட் கோலியை விமர்சித்த சைமன் கேட்டிச்

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் பின்தங்கியுள்ள இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. இந்த தோல்விக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.

அதில் ரோஹித் சர்மா கூட சுமாரான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி இந்தத் தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்து வெற்றியிலும் பங்காற்றினார். இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்து இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

வீழ்ந்த கிங்:

அதனால் 2004 சிட்னி போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவர் அடிக்காதது போல நீங்களும் விளையாடுங்கள் என்று சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் கேட்காத விராட் கோலி தொடர்ந்து அதே போல் அவுட்டாகி இந்தப் போட்டியிலும் தன்னுடைய விக்கெட்டை ஆஸ்திரேலியாவுக்கு பரிசாக கொடுத்து இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவில் விராட் கோலி மொத்தம் 10 சர்வதேச சதங்கள் அடித்துள்ளார். அதனால் அங்குள்ளவர்கள் அவரை கிங் என்று அழைப்பது வழக்கமாகும். ஆனால் இந்த போட்டியில் இந்தியாவின் சூழ்நிலையை அறிந்து பொறுப்பின்றி விளையாடாமல் அவுட்டானதால் விராட் கோலியின் கிங் என்ற பட்டம் ஆஸ்திரேலியாவில் இறந்ததாக முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் விமர்சித்துள்ளார். மேலும் தற்போது பும்ரா தான் இந்தியாவின் கிங் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

புதிய கிங்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிங் இறந்துள்ளார். ஸ்டார்க் துள்ளிக் குதிக்கிறார். கிங் என்ற பட்டத்தை தற்போது பும்ரா எடுத்துள்ளார். விராட் கோலி மனமுடைந்து காணப்படுகிறார். இங்கே அவருக்கு ஒரு பெரிய இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆனால் அவர் குறுகிய நிலைக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலியா அவருடைய நிலையால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: டிராவாக வேண்டிய போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம் – விவரம் இதோ

அவர் கூறுவது போல உண்மையிலேயே இந்தத் தொடரில் பும்ரா மட்டுமே அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 4 போட்டிகளில் 30* விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் முதல் போட்டியில் கேப்டனாக இந்தியாவை வெற்றி பெற வைத்தார். எனவே இனிமேல் புதிய கிங் பும்ரா என்று பாராட்டினால் அது மிகையாகாது.

- Advertisement -