கம்பீரின் உண்மையான முகம்.! கட்டுரை எழுதிய கம்பிர்.! கிரிகெட்டை தாண்டி என்ன செய்கிறார் தெரியுமா..!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி என்று வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன் ஜோடிக்கு பிறகு, இந்திய அணியில் வலது கை மற்றும் இடது கை பேட்ஸ்மேன் ஜோடியில் கலக்கியது சேவாக் மற்றும் கம்பீர் தான். கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி தற்போது கம்பீர் பல சமூக நல உதவிகளை செய்து வருகிறார்.

gautham gambir

- Advertisement -

இந்திய அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக இருந்த கம்பீர், இதுவரை இந்திய அணிக்காக பல ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் தனது செயல்திறனில் சறுக்களை கண்ட கம்பீர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடி வந்த கம்பீரின் தலைமை சரியாக இல்லாததால், அந்த அணியின் கேப்டன் பதவிலிருந்தும் விலகினார். தற்போது கிரிக்கெட்டை தாண்டி சமூக உதவிகளை செய்வதில் மிகுந்த ஈடுபாட்டை காட்டிவருகிறார். இதனால் சமீபத்தில் ஆர் பி எல் வங்கியின் ஒரு உதவி செய்யும் அமைப்பில் இணைந்துள்ளார் கம்பீர்.

அதில் ஆர் பி எல் வங்கியுடன் இணைந்து மார்ட்டின் குழந்தைகளுக்கும் , உதவியற்ற பருவ பெண்களின் வாழ்க்கைக்கு உதவும் திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார் கம்பீர். மார்ட்டின் குழந்தைகள் என்பது, சமூகத்தில் மதவாதத்தினால் உயிரிழந்த பெற்றோர்களின் பிள்ளைகள் என்று அர்த்தம்.

gautam-gambhir

அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவே ஆர் பி எல் வங்கியுடன் இணைந்து உதவிகளை செய்யப்போவதாக கம்பீர் தெரிவித்துள்ளார். கம்பீர் ஏற்கனவே பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரம் குறித்தும் பத்திரிகையில் கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement