சச்சினுக்கு அடுத்து தோனிக்கு தான் ரசிகர்கள் இப்படி எல்லாம் பண்றாங்க – கைரன் பொல்லார்டு கருத்து

Pollard-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-ஆவது லீக் போட்டியானது இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல பரீட்சை நடத்த இருக்கின்றன. ஐபிஎல் தொடரின் இரண்டு சாம்பியன் அணிகளாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

- Advertisement -

இந்நிலையில் மும்பை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான கைரன் பொல்லார்டு : தோனி மும்பை மைதானத்தில் விளையாட இருப்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

சச்சின் இந்தியாவில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அவருக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருக்கும். அதே போன்று சமகாலத்தில் தோனி எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்கிறது. சிஎஸ்கே அணிக்காக அவர்கள் ஆரவாரம் செய்கின்றனர். என்ற அதோடு தோனி தோனி என்கிற முழக்கங்களும் எழுந்து வருகின்றன.

Dhoni

அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் தோனியை கொண்டாடுகின்றனர் என கைரன் பொல்லார்டு கூறியது குறிப்பிடத்தக்கது. 16 வருட ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக திகழ்ந்த இரு அணிகள் என்றால் சென்னை மற்றும் மும்பை அணி தான். எப்பொழுதுமே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத பல தருணங்களை தந்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று இன்றைய போட்டியும் நிச்சயம் மிக சிறப்பான போட்டியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சென்னை அணி முதல் கூட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தாலும் இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

இதையும் படிங்க : IPL 2023 : எல்லா நேரமும் விராட் – டு பிளேஸிஸ் காப்பாத்த மாட்டாங்க, நீங்க என்ன செய்றீங்க? 2 நட்சத்திர ஆர்சிபி வீரர்களை விளாசும் சேவாக்

ஆனால் மும்பை அணி தங்கள் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்த வேளையில் இன்று இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளதால் இந்த போட்டி அவர்களுக்கு முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement