- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் படைக்காத சாதனையை படைத்த பொல்லார்ட். குவியும் வாழ்த்து – விவரம் இதோ

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பொல்லார்ட் டி20 போட்டிகளில் மிகப்பெரிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி இதுவரை உள்ளூர், லீக் மற்றும் சர்வதேசம் ஆகிய அனைத்து வகையான டி20 போட்டிகளில் சேர்த்து 500 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதுவரை பொல்லார்ட் 500 டி20 ஆட்டத்தில் விளையாடி 450 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன்கள் குவித்த அவர் ஒரு சதம் மற்றும் 49 சதங்களை அடித்துள்ளார்.

- Advertisement -

நேற்றைய ஆட்டத்தில் 15 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் என 34 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் இதுவரை 10 ஆயிரம் ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் 404 ஆட்டங்களில் விளையாடி 13296 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதற்கடுத்து மெக்கல்லம் 9922 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், சோயப் மாலிக் 9,746 இரங்கலுடன் நான்காவது இடத்திலும் வார்னர் 9218 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by