சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்த பொல்லார்டு – காரணம் இதுதானாம்

Pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரும், தற்போதைய கேப்டனுமான கைரன் பொல்லார்டு தனது 34-வது வயதில் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு இந்தியாவில் விளையாடி வரும் அவர் இன்றளவும் டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிரடியான ஆட்டத்தை விளையாடக் கூடியவர்.

pollard

- Advertisement -

போட்டியின் எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடிய மிகப் பெரிய பலம் வாய்ந்த வீரரான இவர் இப்படி திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 123 ஒரு நாள் போட்டிகளிலும், 101 டி20 போட்டிகளிலும் அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் கடந்த 2010-ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் இன்றளவும் மும்பை அணிக்காக மட்டுமே 184 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலகெங்கிலுமுள்ள டி20 லீக் போட்டிகளில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி வரும் பொல்லார்டு இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் அவர் குறிப்பிட்டதாவது :

Pollard

மிகப்பெரிய யோசனைக்குப் பிறகே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல இளம் வீரர்கள் விளையாடுவதற்காக காத்திருக்கின்றனர். தற்போது அணியை சரியாக அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எல்லா வீரர்களும் தங்களது தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். அந்த வகையில் நானும் பத்து வயது இருக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்பினேன். தற்போது 15 ஆண்டுகள் தேசிய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி விட்டேன்.

- Advertisement -

அதுமட்டுமின்றி 2007-ஆம் ஆண்டு நான் அணியில் அறிமுகமான போது என்னுடைய சிறுவயது நாயகனான லாராவின் தலைமையிலேயே நான் அறிமுகமானது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். தற்போது உள்ள வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வலுப்படுத்த வேண்டும் எனவே என்னுடைய இடத்தை இளைஞர்களுக்காக விட்டுக் கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அப்போ இந்த வருடமும் ஈ சாலா கப் நமக்கு இல்லையா ! ஆர்சிபி ரசிகர்களை கவலையடைய வைக்கும் புள்ளிவிவரம்

அதுமட்டுமின்றி இனி வரும் இளம் வீரர்களுக்கு தான் ஒருவழியாக வழிகாட்டியாக இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை மேலும் பலமுள்ள அணியாக மாற்றி சர்வதேச கிரிக்கெட்டில் தரம் உயர செய்யவே தான் இந்த அதிரடி ஓய்வு முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொல்லார்டின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்புக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement