4வது டெஸ்ட் போட்டியில் கோலி எத்தனை ரன்கள் அடிப்பார்.? மைக்கேல் வாகன் கணிப்பு.!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்க திணறி வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி ரன்களை அடித்து குவித்தவருகிறார். இந்த தொடரில் மொத்தம் அவர் 440 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். அதில் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரைச்சதங்கள் அடங்கும்.

ko 2

இங்கிலாந்து வீரர்களே இங்கிலாந்து மண்ணில் ரன்களை எடுக்க திணறி வரும் நிலையில், இந்திய அணியின் “Run Machine” என்றழைக்கப்படும் கோலி ரன்களை மிக எளிதாக குவித்து வருகிறார். அவருடைய ஆட்டம் வேற லெவலில் உள்ளது. தொடர்ந்து ரன் குவிப்பில் கவனமாக இருக்கும் கோலி “One Man Army” ஆக இந்திய அணிக்காக தனியாளாக அவரது வேலையை செய்து வருகிறார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் அவர்களிடம் ட்விட்டரில், 4வது டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடிப்பார் என்ற கருத்துக்கு உங்களுடைய பதில் என்ன? என்று கேட்டுள்ளார். அதுக்கு பதில் அளித்த வாஹன் “Highly Likely” அதாவது “அதிகமாக வாய்ப்புள்ளது” என்று பதில் அளித்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் ரன்களை குவிக்க திணறுவார் கோலி. என்று இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னர் அனைத்து இங்கிலாந்து வீரர்களும் கூறினர். ஆனால், இப்போது அவர்களுடைய வாயாலே சதம் அடிப்பார் கோலி என்று கோலி சொல்ல வைத்துவிட்டார். இதுதான் சிறந்த வீரருக்கான பரிசு என்று ட்விட்டர் வாசிகள் கோலியை புகழ்ந்து வருகின்றனர்.