“சச்சினின் இந்த சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்க முடியும்” சக்லைன் முஸ்தாக் பேட்டி

இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் ஏராளமான சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இன்றுவரை இவருடைய பல சாதனைகள் முறியடிக்க முடியாமல் உள்ளன. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 15921 ரன்களை குவித்துள்ளார். அதில் 51 சதம் மற்றும் 68 அரைச்சதங்கள் அடங்கும்.

sachin
sachin

தற்போது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சக்லைன் முஸ்தாக் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில், சச்சினின் 100 சர்வதேச சதங்கள் அடித்த சாதனையை முறியடிக்க இப்போதுள்ள வீரர்களில் கோலி ஒருவருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. மேலும், கோலி சச்சினை மிக வேகமாக நெருங்கி கொண்டு இருக்கிறார்.

இதுவரை 58 சதங்களை கோலி அடித்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களாக சுப்ரீம் பார்மில் இருக்கும் அவர் ரன்களை குவிக்கும் தாகத்தில் உள்ளார். எனவே, அவரால் தொடர்ந்து ரன்களை குவிக்க முடிகிறது. தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்து தொடரில் கூட கோலி 2 சதங்களை அடித்துள்ளார் என்று கூறினார். சக்லைன் முஸ்தாக் தற்போதைய இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றுகிறார்.

virat1

சச்சின் மிகப்பெரிய வீரர் கண்டிப்பாக அவரை யாருடனும் ஒப்பிடமுடியாது. சச்சின், கோலி இரு வெவ்வேறு காலகட்ட வீரர்கள் அதனால் அவர்களை ஒப்பிட்டு பேசமுடியாது. இருந்தாலும், சாதனையை ஒப்பிட்டு பேசமுடியும் அந்த வகையில் தற்போதுள்ள வீரர்களில் கண்டிப்பாக கோலி ஒருவர் மட்டுமே சச்சின் அதிக சதங்கள் எடுத்த சாதனையை முறியடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.