என்னைவிட என் மனைவி இந்த விஷயத்தில் கில்லாடி..! எந்த விஷயத்தில் தெரியுமா..?

- Advertisement -

கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி எப்போதும் தனது உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது தனது உடற் பயிற்சிக்கு துணையாக தன்னுடைய மனைவி அனுஷகா இருப்பதாக கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த கோலிக்கு சில நாட்களுக்கு முன்னர் பின் முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் கோலி பங்கேற்க முடியாமல் போனது. தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சற்று ஓய்வில் இருக்கும் கோலி உடற் பயிற்சிகளில் இருந்து ஓய்வு பெருவதாக இல்லை. தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்ச்சிகளை செய்து வரும் கோலி, தற்போது தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவை தனது ஜிம் பார்ட்னராக வைத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள கோலி, தனது மனைவி அனுஷ்கா தான் தற்போது தன்னுடைய ஜிம் கூட்டாளி என்றும், அவர் தன்னை விட மிக சிறப்பாக உடற்பயிற்சி களை செய்கிறார். தன்னை விட அதிகமாக ஆப்ஸ் பயிற்சிகளை செய்கிறார் என்றும் அதில் தெரிவித்துள்ளார். இணைந்து பயிற்சிகளை செய்வது மேலும் சிறப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார் கோலி.

தற்போது கோலி கிரிக்கெட்டிலிருந்து சற்று ஓய்வு பெற்றுள்ளதால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். சமீபத்தில் தனது அம்மா மற்றும் குடும்ப நபர்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோலிக்கு இந்த ஓய்வு சில காலங்கள் மட்டுமே, இந்த மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கோலி, இன்னும் சில நாட்களில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்டு வரும் பிட்னெஸ் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement