இன்னும் எத்தனை மாற்றங்களை இந்திய அணியில் கொண்டுவருவீர்கள்.? கோலியை கேள்வி கேட்ட இந்திய முன்னாள் வீரர்.!

team-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற எண்ணிக்கையில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. கோலி ஆட்டத்திற்கு ஆட்டம் அணியை மற்றும் சுபாவம் கொண்டவர்.

team

- Advertisement -

3வது போட்டியில் ஆடிய அணியை வைத்தே இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று, இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்திருந்தார். இதனிடையில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜனும் அதையே கூறியுள்ளார். ஹர்பஜன் இந்த தொடர் ஆரம்பம் முதலே இந்திய அணி குறித்தும், அணியின் நிலவரம் குறித்தும் தொடர்ந்து தனது கருத்தினை தெரிவித்த வண்ணம் உள்ளார்.

ஹர்பஜன் கூறியதாவது; இந்திய அணி விராட் தலைமையில் 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு முறை கூட இந்திய அணியில் மாற்றம் செய்யப்படாமல் இல்லை. அதாவது கோலி 38 போட்டிகளிலும் 38 மாற்றங்களை செய்துள்ளார் என ஹர்பஜன் தெரிவித்துள்ளார். அடிக்கடி மாற்றங்களை செய்தல் அணியின் வீரர்களுக்கு நம்பிக்கை போய்விடும் என்றும் தெரிவித்தார்.

team 1

இந்திய அணியில் இவ்வளவு மாற்றங்களை செய்வது “Too Much” என்று அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அணியின் நலன் கருதி அணி நிர்வாகம் கோலி என்ன சொல்கிறாரோ அதை செய்கிறது. அணியின் தேர்வும் பெரும்பாலும் விராட் கோலியை சார்ந்தே இருக்கும்.

Advertisement