கேப்டன் தலைமையில் இதுதான் முதல் முறை.! தலை குனிந்த கோலி.!

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சர்வதேச அரங்கில் பேட்டிங்கில் பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ளார். மேலும் இப்போது இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்படுகிறார் ஆக்ரோஷமான கேப்டன் என்று பெயரெடுத்துள்ள கோலி விளையாட்டில் முழு கவனத்தோடும் ஆட்டத்தை எப்போதும் வெற்றி பெற வைக்கவே முயல்வார்.

koli

களத்தில் இவர் கேப்டனாக ஆக்ரோஷ படுவதை பார்த்த சிலர் அவரை விமர்சித்தனர் ஆனால் கோலி ஆட்டத்தில் போராட்ட குணம் உடையவர் இதனால் அவரால் அடுத்து அடுத்து பல போட்டிகளில் வெற்றிகளை குவிக்க முடிந்தது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் 1 நிலைக்கு கூட அழைத்து வந்துள்ளார்.தற்போது இங்கிலாந்தில் சற்று திணறிவரும் இந்திய அணி முதல் இரு போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

கோலியின் தலைமையில் மொத்தம் 37 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 21 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது 7 போட்டியில் தோல்வியும் 9 ட்ராவ்வும் பெற்றுள்ளது கடைசியாக நடந்த 37வது போட்டியில் தான் இந்திய அணி கோலியின் தலைமையின் கீழ் முதல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது புள்ளி விவரமே இந்திய அணியின் போராட்ட குணத்திற்கு சரியான உதாரணம் ஆகும். இதற்குமுன் 6முறை தோற்றாலும் ரன் வித்தியாசத்தில் தன இந்திய அணி தோல்வியுற்றுள்ளது

record

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை குவித்த கேப்டனாக தோனி உள்ளார் அவரின் தலைமையின் கீழ் இந்திய அணி 27 வெற்றிகளை பெற்றுள்ளது மொத்தம் 60 போட்டிக்கு தோனி தலைமை தாங்கி இச்சாதனையை செய்துள்ளார் ஆனால் கோலி 37 டெஸ்டில் 21 வெற்றிகளை பெற்றுள்ளார் சிறந்த கேப்டனாக செயல்படும் கோலி இங்கிலாந்து தொடரில் தோல்வியின் பிடியில் இருந்து அணியை மீட்டு எடுப்பார் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பும் கூட..