அதிகம் புகழப்படாத உலகின் தலைசிறந்த பவுலர் இவர்தான் – இந்திய வீரரை புகழ்ந்த உஸ்மான் கவாஜா

Khawaja
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகள், 40 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர். இந்நிலையில் அவர் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை தான் தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட வரிசை என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜஸ்பிரித் பும்ராவின் ஆக்சன், பவுன்சர், ஸ்லோ பால் என அனைத்தும் ஒரு ஜீனியஸ் பந்து வீசுவதை போன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Bumrah

- Advertisement -

அதோடு மட்டுமின்றி இஷாந்த் சர்மாவை பாராட்டிய அவர் : இசாந்த் சர்மா ஒரு ஸ்கில் நிறைந்த பவுலர். டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு பந்து வீச முடியும் என்பதனை அறிந்து பந்துவீசி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி உலக அளவில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட திறமைவாய்ந்த ஒருவராக முஹம்மது ஷமியை கூறியுள்ளார். ஷமி குறித்து அவர் கூறுகையில் :

உலகின் சிறந்த பவுலரான ஷமியை இதுவரை அனைவருமே குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஆனால் முகமது ஷமி நாம் நினைப்பதை விட திறமையான பந்து வீச்சாளர். பேட்ஸ்மேன் யோசிக்கும் முன்னரே அவருடைய பந்து பேட்ஸ்மேனை தாண்டிச் செல்லும். அந்த அளவிற்கு அவர் வேகத்தில் பந்து வீச கூடியவர். அதுமட்டுமின்றி எப்படிப்பட்ட சூழலிலும் அவர் சிறப்பாக பந்து வீசும் திறனையும் பெற்றுள்ளார் என்று ஷமியை பாராட்டினார்.

Shami

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : என்னை பொருத்தவரை தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசைதான் உலகின் தலை சிறந்த பந்துவீச்சு வரிசை. இந்திய அணியில் உள்ள அனைவருமே சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

shami 2

அனுபவ வீரர்களாக இருந்தாலும் சரி, அணிக்கு தற்போது வரும் இளம் வீரர்களாக இருந்தாலும் சரி அனைவருமே பந்துவீச்சில் தங்களது பங்களிப்பை மிகச்சரியாக வெளிப்படுத்துகின்றனர் என்று இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement