மழை நின்று போட்டி நடந்தாலும் இவர் இந்திய அணியில் விளையாடுவது கஷ்டம் – விவரம் இதோ

Khaleel

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Ground

இந்நிலையில் நேற்றிரவு ராஜ்கோட் மைதானத்தில் கனமழை பெய்ததால் இன்றைய போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மைதான நிர்வாகிகள் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ரோஹித் இன்றைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிவித்தார். அதன்படி இன்றைய போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவிற்கு பதிலாக ஷர்துல் தாகூர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Khaleel

ஏனெனில், இந்திய அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளாயாடியுள்ள கலீல் அகமது 8 போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளதாலும், விக்கெட் வீழ்த்தும் அளவிற்கு திறமையாக பந்துவீசாததாலும் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஷர்துல் தாகூரை களமிருக்கும் திட்டம் இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -