இவர் வெர்ல்டு லெவல்ல டாப்ல வருவார்னு எனக்கு 13 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் – கெவின் பீட்டர்சன் பேட்டி

Pieterson-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 19 வயதுக்கு உட்பட்டவர் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த பின்னர் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி அதன் பின்னர் தனது அசாத்தியமான திறமை ஆனால் இன்று உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக வளர்ந்திருக்கிறார்.

kohli 2

- Advertisement -

கிட்டத்தட்ட கிரிக்கெட் கடவுளான சச்சினின் சாதனையை முறியடிக்க தகுதியுள்ள ஒரே வீரர் என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதற்கேற்றார்போல் அவரது ஆட்டமும் ஆண்டுக்காண்டு வளர்ச்சி அடைந்து கொண்டே வந்துள்ளது.

அரைசதம் அடித்து விட்டால் சதம் அடிக்காமல் வெளியேற மாட்டார் என்று கூறும் அளவிற்கு சதங்களை அடித்து தள்ளுகிறார். இதுவரை 70 சதங்களை அடித்து இருக்கும் அவர் விரைவில் 100 சதங்களை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

Kohli

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் அனைவரையும் ஏமாற்றியது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய கோலியின் ஆட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் அதிகளவில் எழுந்தன.

- Advertisement -

ஆனால் தற்போது கோலியின் ஆரம்பகால கிரிக்கெட் குறித்து பேசியுள்ள பீட்டர்சன் குறிப்பிட்டதாவது : 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும் போது நான் கோலியுடன் விளையாடி இருக்கிறேன். அப்போது விராட் கோலியுடன் பேருந்தில் வந்து கொண்டிருக்கையில் அவர் கிரிக்கெட் குறித்த பல கேள்விகளை என்னிடம் கேட்டறிந்தார். அந்த கேள்விகள் என்னை அசரவைத்தன.

Pieterson

மேலும் இளம் வயதிலேயே அவரிடம் கிரிக்கெட் குறித்த அணுகுமுறையை நான் பார்க்கையில் நிச்சயம் உயரிய இடத்திற்கு இவர் செல்வார் என்று உணர்ந்தேன். அதை நான் அவரிடம் கூறி இருக்கிறேன் அவரது இளம் வயதில் பல உதவிகள் மற்றும் அறிவுரைகளை கூறியதில் எனக்கு பங்கு உள்ளது என்று கெவின் பீட்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement