இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கடினமான இலக்கினை எதிர்த்து விளையாடிய இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாடிய இந்திய அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்து.
இதன் காரணமாக இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13 ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணி அடைந்த இந்த தோல்வி பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் இந்தத் தோல்வியை கேலி செய்யும் வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் : ஆஸ்திரேலியாவை அதன் சொந்த நாட்டில் தோற்கடித்தது குறித்து நிறைய சந்தோஷம் கொள்ள வேண்டாம். மேலும் நிறைய கொண்டாடவும் வேண்டாம். ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் அடுத்து இருக்கிறது என நான் எச்சரிக்கை விடுத்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? இந்தியா என்று பதிவிட்டுள்ளார்.
India , yaad hai maine pehele hi chetawani di thi ke itna jasn na manaye jab aapne Australia ko unke ghar pe haraya tha 😉
— Kevin Pietersen🦏 (@KP24) February 9, 2021
இந்த பதிவை அவர் ஹிந்தியில் பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணில் வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்தது. அப்போது இந்திய அணியை அனைவரும் பாராட்டி வந்த நிலையில் பீட்டர்சன் அடுத்ததாக நீங்கள் இங்கிலாந்தை எதிர்கொள்ளப் போகிறீர்கள் எனவே இந்த வெற்றியை பெரிதாகக் கொண்டாட வேண்டாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.