இந்திய ஜாம்பவானான இவருடைய அறிவுரைகளே என்னை முழுமையான பேட்ஸ்மேனாக மாற்றியது – பீட்டர்சன் புகழாரம்

Pieterson-1
- Advertisement -

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆகவும் அந்த அணிக்காக மிகச்சிறப்பாக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடிய வீரர் கெவின் பீட்டர்சன். இவரது பேட்டிங் ஸ்டைலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார் பீட்டர்சன்.

Pieterson

- Advertisement -

தற்போது இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் உடன் தனக்கு இருந்த இனிமையான நினைவுகள் பற்றி பேசியுள்ளார் கெவின் பீட்டர்சன். மேலும் அவரது அறிவுரைப்படி தான் தனது பேட்டியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

இந்தியா போன்ற ஆசிய ஆடுகளங்களில் எனக்கு சுழற்பந்து வீச்சை ஆடுவதில் மிகப் பெரிய சிரமம் இருந்தது. ஒரு கட்டத்தில் ராகுல் டிராவிட் இடம் சென்று அறிவுரையை கேட்டேன். ஈமெயில் மூலமாக நான் கேட்டிருந்தேன்.

Pieterson 1

அதற்கு அவர் எனக்கு உடனடியாக பதில் அளித்தார். பந்து எங்கே குத்துகிறது, என்பதை முடிந்தவரை வேகமாக கணித்து விட வேண்டும். மேலும் அவசரப்படாமல் பின்னோக்கி ஆட வேண்டும். கால் காப்பு கட்டாமல் சுழற்பந்து வீச்சை பயிற்சி களத்தில் எதிர் கொண்டு ஆடி பழக வேண்டும்.

Pieterson 2

அப்போது காலில் பந்து படுவதால் வலியை தாங்க முடியாமல் தானாகவே நமது பேட் காலுக்கு முன்னதாகச் சென்று விடும் என்று ராகுல் டிராவிட் அறிவுரை கூறியிருந்தார். இதனை வைத்துதான் எனது பேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இவ்வாறு கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்.

Advertisement