4இல் ஒரு பங்கை கூட தொட முடியாது.. சர்ச்சையில் சிக்கிய தியேட்டர்மேன் விராட் கோலிக்கு பீட்டர்சன் ஆதரவு

Kevin Pieterson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 81 சதங்களையும் குவித்துள்ளார். மேலும் உலகின் மற்ற பேட்ஸ்மேன்களை விட மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலாக விளையாடும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதன் காரணமாக நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படும் அவரை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் கிங் என்று பாராட்டுவது வழக்கமாகும்.

ஆனால் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் 60 ரன்களை அதிரடியாக குவித்து பின்னடைவை ஏற்படுத்தினார். குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக 3 வருடம் கழித்து சிக்ஸர் அடித்த அவர் 18 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதன் காரணமாக அவரது தோளில் விராட் கோலி இடித்தார்.

- Advertisement -

தியேட்டர்மேன் கிங் கோலி:

அதற்கு ஏராளமான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தார்கள். அதன் உச்சமாக ஒரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கை விராட் கோலியை கோமாளி என்று முகப்பு பக்கத்தில் மோசமாக சித்தரித்து விமர்சித்துள்ளது. இந்நிலையில் தியேட்டரில் கிடைக்கும் பொழுதுபோக்கை போல மைதானத்தில் விராட் கோலி சுவாரசியத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்று கெவின் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருவேளை விராட் கோலி இல்லையெனில் போட்டி அலுப்புத் தட்டுவதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இங்கே விளையாடும் பல வீரர்கள் விராட் கோலியின் கேரியரில் நான்கில் ஒரு பங்கை கூட தொட முடியாது என்றும் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் விராட் கோலி தியேட்டரை உருவாக்கி வருகிறார். அதற்குப் போகலாம் வாங்க”

- Advertisement -

பீட்டர்சன் ஆதரவு:

“அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் இல்லையெனில் அது எவ்வளவு அலுப்பு தட்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். தனது கேரியரில் சம்பாதித்துள்ள ஒவ்வொரு ரன்களுக்கும் விராட் கோலி தகுதியானவர். இங்கே பலர் தங்களுடைய கேரியரை விராட் கோலியின் கேரியரில் சாதித்ததை நான்கில் ஒரு பங்கு மட்டுமே சாதித்து முடிக்கக்கூடும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அந்த தவறை முகத்துக்கு நேரா சொல்லி சிராஜை டீமை விட்டு தூக்குங்க – சுனில் கவாஸ்கர் கொந்தளிப்பு

அவர் கூறுவது போல மேடு பள்ளங்கள் என்பது மனிதர்களின் வாழ்வில் சகஜமான ஒன்றாகும். சொல்லப்போனால் இதே தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த போது விராட் கோலி அனைவரும் கிங் என்று பாராட்டினார்கள். ஆனால் தொடர் முடிவதற்குள் தற்போது சுமாராக விளையாடுவதால் அவரை ஓய்வு பெறுமாறு பலரும் விமர்சிக்கிறார்கள். நாளை மீண்டும் நன்றாக விளையாடினால் இன்று விமர்சிப்பவர்கள் விராட் கோலியை பாராட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement