சஞ்சு சாம்சன் அதை நல்லா தான் அடிக்கிறாரு.. இந்த விஷயம் புரியாம உடனே விமர்சிக்காதீங்க.. பீட்டர்சன் ஆதரவு

Kevin Pieterson
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 20 ஓவரில் 145-9 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக பேட்டிங் செய்து தோல்வியை சந்தித்தது.

முன்னதாக சமீபத்திய வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதன் காரணமாக இந்தத் தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இதுவரை ஒருவரை சிறந்த அடிக்கவில்லை. அவருடைய ஆட்டம் இந்திய அணிக்கு டாப் ஆர்டரில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

சாம்சனுக்கு ஆதரவு:

குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக எதிர்கொள்ள முடியாமல் சாம்சன் தனது விக்கெட்டை பரிசாக கொடுத்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் ஷர்மாவும் அதே பந்துகளில் அவுட்டாகி தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். அதனால் அவர்கள் மீது விமர்சனங்கள் எழத் துவங்கியுள்ளது. இந்நிலையில் சாம்சன் – அபிஷேக் ஷார்ட் பந்துகளை நன்றாகவே எதிர்கொள்வதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொண்டு அவர்களை விமர்சிக்காதீர்கள் என்றும் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டாப் ஆர்டரில் நீங்கள் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும். அது அபிஷேக் ஷரமா போன்ற இந்த அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பொருந்தும்”

- Advertisement -

விமர்சனம் இல்லை:

“அவர்கள் டாப் ஆர்டரில் ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார்கள் அப்படி விளையாடும் போது சில நேரங்களில் நீங்கள் வெல்வீர்கள். சில நேரங்களில் தோற்பீர்கள். சாம்சனும் பல நேரங்களில் நன்றாகவே விளையாடுகிறார். அவர் மனதளவில் திடமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாக அவரை நான் விரும்புகிறேன். சொல்லப்போனால் கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாக அசத்தாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”

இதையும் படிங்க: 332 ரன்ஸ்.. முதல் நாளிலேயே இலங்கையை நொறுக்கிய கவாஜா, ஆஸி.. டிராவிட்டை முந்தி ஸ்மித் 10000 ரன்ஸ் சாதனை

“ஆம் அவரிடம் நல்ல ஆட்டம் இருக்கிறது. ஆனால் இது போன்ற விஷயங்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படியே தொடர்ந்து விளையாடினால் அவருடைய டெக்னிக் பற்றி கேள்விகள் எழும். ஆனால் சிறந்த வீரரான அவர் ஷார்ட் பந்துகளை மிகவும் நன்றாக விளையாடுகிறார். பாறையைப் போல் திடமாக விளையாடக்கூடிய அவரை இந்தக் கோணத்தில் பார்க்கும் போது நான் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்காக விமர்சனம் செய்யப் போவதில்லை” என்று கூறினார்.

Advertisement