வாங்குன அடியில் அவங்க எழுந்திருப்பது கஷ்டம்.. ஐபிஎல் 2024 ஃபைனல் வின்னரை கணித்த கெவின் பீட்டர்சன்

Kevin Pieterson 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் அசத்திய கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளை பொறுத்த வரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ரசல், ரிங்கு சிங், சுனில் நரேன் போன்ற மேட்ச் வின்னர்களுடன் கொல்கத்தா வலுவான அணியாகவே இருக்கிறது.

மேலும் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் ஏற்கனவே குவாலிபயர் 1 போட்டியில் ஹைதராபாத்தை தோற்கடித்த கொல்கத்தா நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை வென்ற பட் கமின்ஸ் தலைமையில் ஹைதராபாத் எதிரணிகளை சொல்லி அடித்து வருகிறது.

- Advertisement -

பீட்டர்சன் கணிப்பு:
குறிப்பாக டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 287 ரன்கள் விளாசி, 5 ஓவரில் 100 ரன்கள் குவித்து, 166 ரன்களை 9.2 சேசிங் செய்த ஹைதெராபாத் சாதனை வெற்றிகளை பெற்றது. எனவே கொல்கத்தாவை வீழ்த்தி கோப்பையை வெல்லும் அதிரடியான திறமை ஹைதராபாத் அணியிடம் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஃபைனலில் டாஸ் வெல்லும் அணி 50% போட்டியை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கிடைத்துள்ளார்.

இருப்பினும் குவாலிபயர் 1 போட்டியில் கொல்கத்தா அணியிடம் வாங்கிய அடியிலிருந்து ஹைதராபாத் மீண்டெழுவது கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “டாஸ் 50 – 50 வெற்றியை தீர்மானிக்கும். நீங்கள் பனி வருகிறதா இல்லையா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெற்றி என்பது நீங்கள் எந்தளவுக்கு நல்ல மனநிலை மற்றும் தன்னம்பிக்கையுடன் ஃபைனலுக்கு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது”

- Advertisement -

“அங்கே தான் கொல்கத்தாவுக்கு சாதகம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இதுவரை அவர்கள் விளையாடிய விதமும் குவாலிபயர் 1 போட்டியில் வென்ற விதமும் நன்றாக உள்ளது. அவர்களுக்கு கடந்த 3 – 4 நாட்கள் ஃபைனலுக்கு தயாராக போதுமான நேரம் கிடைத்திருக்கும். மறுபுறம் அகமதாபாத் நகரில் நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் ஹைதராபாத் தங்களுடைய துண்டை போட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை”

இதையும் படிங்க: அம்மா சொன்ன அந்த வார்த்தைகள் தான் என்னோட வெற்றிக்கும் காரணம்.. கஷ்டமான காலமும் அது தான்.. பட் கமின்ஸ்

“அது ஞாயிற்றுக்கிழமை அவர்களை பின்னங்காலில் நிற்க வைக்கும். குறிப்பாக டிராவிஸ் ஹெட் கையில் பட் கமின்ஸ் பந்தை கொடுத்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து நொறுக்கினார். அது சில தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தை வீழ்த்தினோம் என்ற தன்னம்பிக்கையை கொல்கத்தாவுக்கு கொடுத்திருக்கும். எனவே ஹைதராபாத் அணி அங்கிருந்து எழுந்திருப்பது மிகவும் கடினமாகும். அதே சமயம் தென்னாபிரிக்க தொடரில் கோப்பையை வென்ற அவர்களுக்கு இங்கேயும் எப்படி வெல்வது என்பது தெரியும்” என்று கூறினார்.

Advertisement