அம்மா சொன்ன அந்த வார்த்தைகள் தான் என்னோட வெற்றிக்கும் காரணம்.. கஷ்டமான காலமும் அது தான்.. பட் கமின்ஸ்

Pat Cummins 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் அப்போட்டியில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த ஹைதராபாத் இம்முறை ஃபைனலுக்கு தகுதி பெற கேப்டன் பட் கமின்ஸ் முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.

வேகப்பந்து வீச்சாளரான அவர் கேப்டனாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஆஷஸ் கோப்பையை அவருடைய தலைமையில் தக்க வைத்து ஆஸ்திரேலியா அசத்தியது. அதை விட 2023 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று எதிரணிகளை சொல்லி அடித்தது.

- Advertisement -

கமின்ஸ் உருக்கம்:
அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை ஃபைனலில் வீழ்த்திய பட் கமின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு 5வது கோப்பையை பரிசளித்தார். அதன் காரணமாக 20.50 கோடிக்கு தம்மை நம்பி வாங்கிய ஹைதராபாத் அணியை தற்போது அவர் முதல் சீசனிலேயே ஃபைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் கேப்டனாக இப்படி தம்முடைய வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு தன்னுடைய அம்மாவுக்கு சொன்ன வார்த்தைகளே முக்கிய காரணம் என்று பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் போது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் இந்தியாவிலிருந்து வெளியேறினார். அப்போது தான் தம்முடைய அம்மா அந்த வார்த்தைகளே சொன்னதாக கமின்ஸ் கூறியுள்ளார். ஆனால் அதன் பின் அம்மா இயற்கையை எய்தியது தமது வாழ்நாளின் கடினமான நாட்கள் என்றும் கமின்ஸ் உருக்கமாக கூறியுள்ளார். இது பற்றி அமேசான் ப்ரைம் வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய அம்மா என்னிடம் “பட், நீ சென்று இந்த உலகத்தை எடுத்துக்கொள். எப்படியாக இருந்தாலும் இந்த உலகத்தில் யாராவது ஒருவர் சென்று இந்த அற்புதமான விஷயங்களை செய்யப் போகிறார்கள். அது ஏன் நீயாக இருக்கக் கூடாது? அது நீயாகவும் இருக்கலாம்” என்று என்னிடம் சொன்னார். இந்தியாவிலிருந்து விமானத்தில் சென்ற போது நான் மீண்டும் சில வாரங்களில் வருவேன் என்று நினைத்தேன்”

இதையும் படிங்க: சேப்பாக்கம் பிட்ச் அவங்களுக்கு தான் செட்டாகும்.. ஐபிஎல் 2024 கோப்பையை வெல்லப்போகும் அணியை கணித்த ஹைடன்

“ஆனால் அது பறந்து சென்று விட்டது. எளிமையாக அதுவே என்னுடைய வாழ்நாளில் மிகவும் கடினமான நேரமாகும். 12 மாதங்கள் வரை நான் அதை உணர்ந்திருக்கலாம். இருப்பினும் நான் பறந்து செல்லும் எந்த நேரத்திலும் “இங்கே நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டில் செலவழிப்பதை விட எங்கேயாவது சென்று விளையாடுவதை நான் தேர்வு செய்கிறேன்” என்று நினைத்துக் கொண்டேன்” எனக் கூறினார்.

Advertisement