சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த பவுலராக இவரது பெயர் மாறும் – தமிழக வீரரை பாராட்டிய பீட்டர்சன்

Pieterson-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அவர்களை விட 33 ரன்கள் மட்டுமே அதிகம் எடுத்து 145 ரன்கள் குவித்தது. அதன்பிறகு இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக 81 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணி இரண்டாம் நாளே வெற்றி வாய்ப்பை இழந்தது.

ind

- Advertisement -

வெறும் 47 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி 7.4 ஓவர்களிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இந்திய அணி தக்கவைத்தது.

இந்த போட்டியில் விழுந்த மொத்தம் 30 விக்கெட்டுக்களில் 28 விக்கெட்டுகள் சுழற்பந்துவீச்சாளர்கள் மூலம் வீழ்த்தப்பட்டது. அதிலும் குறிப்பாக அக்ஷர் பட்டேல் 11 விக்கெட்டுகளையும், அஷ்வின் 7 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த மூன்றாவது போட்டி முற்றிலும் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததாலும், இரண்டே நாட்களில் போட்டி முடிவடைந்தாலும் இந்த மைதானம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் இந்த பிட்ச் குறித்து தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பீட்டர்சன் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் அஸ்வின் குறித்து புகழ்ந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Ashwin

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை தற்போது அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார். அவர் மிகத் திறமையான பந்து வீச்சாளர். ஒரு பேட்ஸ்மேனை எப்படி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் இருக்கின்றன. இதே திறமையோடு அவர் இப்படியே சென்றால் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளராக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கெவின் பீட்டர்சன் அஸ்வினை புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement