- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதுகில் குத்தாமல் அன்பைக் கொடுத்த இந்தியாவின்.. இதயத்தில் நானும் இருக்கேன்.. கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி

உலக கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் தரமான அணிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா ஜொலித்து வருகிறது. அதே போல டெஸ்ட் போட்டிகளிலும் டாப் 5 இடத்திற்குள் அசத்தி வரும் இந்திய அணி ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சவாலைக் கொடுத்து வெற்றி வாகை சூடி வருகிறது.

அப்படிப்பட்ட இந்தியாவை நிறைய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மனதார விரும்புவது வழக்கமாகும். இங்குள்ள கலாச்சாரம் மற்றும் அன்பான மக்கள் ஆகியவை நிறைய வெளிநாட்டு வீரர்களுக்கு பிடிக்கிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்தியாவின் மேலே கொண்ட அன்பு காரணமாக இந்தியாவில் உள்ள கோவாவில் குடி பெயர்ந்துள்ளார்.

- Advertisement -

இதயத்தைக் கொடுத்த இந்தியா:

அத்துடன் தம்முடைய செல்ல மகளுக்கு இந்தியா என்றும் பெயர் சூட்டியுள்ள அவர் பாரத நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். அவரைப் போலவே இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் இந்தியாவின் மேலே மிகவும் விருப்பம் கொண்டுள்ளார். அது பற்றி அவர் பலமுறை தம்முடைய சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

அதைப் பார்த்த சிலர் இந்தியா பற்றி மட்டும் கனிவாக பேசுவது ஏன்? என்று அவரிடம் ட்விட்டரில் கேட்டுள்ளார்கள். அதற்கு மற்ற இடங்களைக் காட்டிலும் இந்தியாவில் தம்மை அனைவரும் மரியாதையுடன் அன்பாக நடத்துவதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அதனால் இந்தியாவுக்கு தன்னுடைய இதயத்தில் தனியாக இடத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பீட்டர்சன் நெகிழ்ச்சி:

இது பற்றி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பீட்டர்சன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மக்கள் அடிக்கடி நீங்கள் ஏன் இந்தியரைப் போல் தெரிகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். அதற்கான பதில் எளிது. கடந்த 20 வருடங்களில் நான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணங்களில் எப்போதும் மரியாதையின்மை, எதிர்மறைத்தன்மை, முதுகில் குத்துதல் அல்லது மோசமான எனர்ஜி ஆகியவற்றை எதிர்கொண்டதில்லை”

“ஒருமுறை கூட அதை நான் எதிர்கொண்டதில்லை. ஒவ்வொரு முறையும் அன்பு, இரக்கம், விசுவாசம், மரியாதையை மட்டுமே பெற்றுள்ளேன். இந்தியாவில் நான் புதையலாக கருதக்கூடிய வாழ்நாள் நட்புகளையும் பெற்றுள்ளேன். இங்கே நண்பர்கள் குடும்பமாகவும் சகோதரர்களாகவும் கிடைத்துள்ளார்கள். மரியாதை சம்பாதிக்கப்பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும்”

இதையும் படிங்க: ராகுல் டிராவிட்டையே வசை பாடிய ஊர்யா இது.. விளையாடாத கம்பீரை மட்டும் விடுமா? உத்தப்பா பேட்டி

“ஆனால் இங்கே நான் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அல்லது ஒரு ஐபிஎல் அணிக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி மரியாதையை சம்பாதித்துள்ளேன் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு நாடும் அதனுடைய மக்களும் உங்களுக்கு நேர்மறையான எனர்ஜியை கொடுக்கும் போது அந்த அன்பு 10 மடங்காக பெருகும். இந்தியா எனக்கு முதலில் அதனுடைய இதயத்தைக் கொடுத்தது. எனவே எப்போதும் என்னுடையதாக இருக்கும் இந்தியாவுக்கு நன்றியுடையவனாக இருப்பேன். கெவின் பீட்டர்சன்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -