வித்தியாசமான முறையில் இந்திய மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்த கெவின் பீட்டர்சன் – நன்றி தெரிவித்த மோடி

Kevin
- Advertisement -

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற பணம் கொழிக்கும் பெரும் விளையாட்டுப்போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில போட்டிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

corona 1

ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே சுய ஒழுக்கத்துடன் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், மக்களுக்கு பிரபலமான பிரபலங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்கள் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் தற்போது வர்ணனையாளராகவும் உள்ள கெவின் பீட்டர்சன் இந்திய மக்களுக்கு இந்தி ட்வீட் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் அவர் செய்துள்ள ட்வீட் :

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகி வருகிறது. இந்திய அரசாங்கம் சொல்வதை சரியாக கேட்டு சரியாக நடந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கரோனாவிற்கு எதிராக போராடுவோம். வீட்டிற்குள் மட்டும் சில நாட்கள் இருந்து விடுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் கெவின் பீட்டர்சன்.

- Advertisement -

இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்துக்களை தெரிவித்து அதனை ரீட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ட்வீட் தற்போது ரசிகர்களால் அதிக அளவு பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பி.சி.சி.ஐ தற்போது நடைபெற இருந்த தென்னாபிரிக்க தொடரை ரத்து செய்தது மட்டுமின்றி இந்த வருடம் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரையும் இந்த மாதம் மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement