Worldcup : விஜய் ஷங்கரை தேர்வு செய்தது தவறு. இவர்களை தேர்வு செய்திருக்கலாம் – கெவின் பீட்டர்சன் பேட்டி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Kevin
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Team-1

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் ஷங்கர் இடப்பிடித்துள்ளார். ராயுடு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜய் ஷங்கர் தேர்வானது எப்படி என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் 4 ஆவது வீரருக்கு ராயுடுவிற்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ராயுடு எதிர்பார்த்த அளவு தனது திறமையை நிரூபிக்க தவறினார். ஆனால், விஜய் ஷங்கர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே தன் திறமையை நிரூபித்து உள்ளார் என்றும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் விஜய் ஷங்கர் தேர்வானது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் 9 போட்டிகள் மட்டுமே விளையாடிய விஜய் ஷங்கர் அணியில் தேர்வானது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் ரஹானே, ராயுடு மற்றும் ஜாதவ் போன்றோர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடியுள்ளனர்.

அவர்களுக்கு மேலும் வாய்ப்பு வழங்கி அவர்களை தேர்வு செய்திருக்கலாம். அவர்களை விடுத்து 9 போட்டிகளே ஆடியே விஜய் ஷங்கரை இவ்வளவு பெரிய தொடருக்கு அனுபவம் இல்லாமல் தேர்வு செய்தது எனக்கு சரியாக படவில்லை. அவர் இடத்தில தினேஷ் கார்த்திக், ஜாதவ் ஆகியோரை பரிசீலனை செய்யலாம் என்று பீட்டர்சன் கூறினார்.

Advertisement