சேவாக் தான் கெத்து..! தோனி லிஸ்ட்லயே இல்ல ..! பீட்டர்சன் அதிரடி பேட்டி..! – விவரம் உள்ளே

kevin

இந்திய கிரிக்கெட் அணியில் மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என்று பல்வேறு புகழ்களை பெற்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வந்தவர் சச்சின் டெண்டுல்கர்.ஆனால் , இவர் பிரபல இங்கிலாந்து அணியின் பீட்டர்சன் அறிவித்துள்ள தனது கனவு அணியில் இடம்பெறாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
pietersen
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதத்தை அடித்த வீரர். கிரிக்கெட் உலகில் 100 சதத்தை அடித்த வீரர் என்று சச்சின் படைத்த சாதனைகள் குறித்து சொல்லிகொண்டேய போகலாம். இவருக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடிக்கு பெயர் போனவர் சேவாக் மட்டும் தான்.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கேவின் பீட்டர்சன் சமீபத்தில் தனக்கு அபிமான சர்வதேச கிரிக்கெட் வீரர்களை கொண்டு டெஸ்ட்,ஒரு நாள் மற்றும் டி20 அணியை தேர்வு செய்துள்ளார். இந்த மூன்று அணிகளுக்குமே அவர் கேப்டனை நிர்ணயிக்கவில்லை. ஆனால், இந்த மூன்று விதமான கிரிக்கெட் போட்டியில் சேவாக் தான் தொடக்க ஆட்டக்காரராக உள்ளார்.
dhoni
பீட்டர்சன் தேர்வு செய்துள்ள அணியில் சச்சின் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்றிருப்பது தான் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதே போல உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் பீட்டர்சன் தேர்வு செய்துள்ள டி20 அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அதே போல இந்திய வீரராண கோலியும், பீட்டர்சனின் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.