தெ.ஆ அணி சார்பாக 60 வருடங்கள் கழித்து இமாலய சாதனை நிகழ்த்திய கேசவ் மஹாராஜ் – விவரம் இதோ

Maharaj-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீசிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது, அங்கு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அற்புதமாக பந்து வீசிய அந்த அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மஹாராஜ், ஒரே இன்னிங்சில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

Maharaj

- Advertisement -

இந்த போட்டியின் நான்காவது இன்னிங்சில் 324 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள், மஹாராஜின் சுழல் பந்து வீச்சில் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணியால் 165 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்த போட்டியின் நான்காவது இன்னிங்சின் 37வது ஓவரை கேசவ் மஹாராஜ் வீசினார்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கைரன் பவல் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த அந்த அணியின் கேப்டனான ஜேசன் ஹோல்டர் மற்றும் ஜோஷுவா டா சில்வா ஆகியோரும், மஹாராஜின் அடுத்தடுத்த பந்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட் வராலாற்றில் ஹாட்ரிக் எடுத்த இரண்டாவது தென் ஆப்ரிக்க வீரர் மற்றும் முதல் ஸ்பின் பௌலர் என்ற சாதனைகளை அவர் படைத்தார்.

maharaj

தென் ஆப்ரிக்க அணிக்காக 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த ஒரு வீரரும் ஹாட்ரிக் எடுத்ததில்லை. தற்போது 60 ஆண்டுகள் கழித்து ஹாட்ரிக் சாதனையை அந்த அணிக்காக படைத்துள்ளார் கேசவ் மஹாராஜ். மேலும் இதில் ஒரு சர்வதேச சாதனையும் அடங்கியிருக்கிறது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு பவுலரும் நான்காவது இன்னிங்சில் ஹாட்ரிக் எடுத்ததில்லை.

maharaj 3

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்காவது இன்னிங்சில் ஹாட்ரிக் எடுத்ததால், சர்வதேச டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் ஹாட்ரிக் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் மஹாராஜ் படைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் அறிமுகமான கேசவ் மஹாராஜ், இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 129 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு இன்னிங்சில் 7 முறை ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement