தோனியை மட்டும் ஏன் டார்கெட் பண்றாங்கன்னு தெரியல. அடுத்த வருஷம் பாப்பீங்க அவர் யாருன்னு – பயிற்சியாளர் அதிரடி பேட்டி

Dhoni
- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. துவக்கத்தில் சில மாதங்கள் அவரே ஓய்வு கேட்டாலும் அதன் பின்னர் நடைபெற்ற தொடர்களில் தோனியை இந்திய நிர்வாகம் கழற்றி விட்டது என்றே கூறலாம். மேலும் சமீபத்தில் வெளியான பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டது.

Dhoni

- Advertisement -

இதன் காரணமாக தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தோனியும் இதுவரை தனது ஓய்வு முடிவை குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஐபிஎல் தொடரில் தான் சிறப்பாக விளையாடி உலக கோப்பை டி20 தொடரில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அந்த கனவும் தற்போது தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால் தோனி நிச்சயம் இனி இந்திய அணிக்கு திரும்புவது மிகக் கடினம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று நீண்ட நாட்களாக பேச்சும் எழுந்து வந்தது.

Sakshi

இந்நிலையில் தற்போது நேற்று திடீரெனெ தோனி ஓய்வு குறித்து ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் ட்ரென்டிங் டோபிக்காக மாறியுள்ளது. நேற்று திடீரென #DhoniRetires என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் அதிகளவு ட்ரென்டிங் ஆகியது. இதனை கண்ட தோனியின் மனைவி “இது வெறும் வதந்தி தான். லாக்டவுன் காலத்தில் மக்களின் மனநிலை நிலையில்லாததாக மாறியுள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே சாக்ஸி அதனை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேசவ் பேனர்ஜி சமூக வலைதளத்தில் வெளியாகும் செய்திகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கூட தோனி விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : யாராவது ஒருவரை அழைத்து அவர்களிடம் நான் ஓய்வுபெறப் போகிறேன் என்று தெரிவிக்கும் ஆள் தோனி கிடையாது. அவருக்கு ஓய்வு எப்படி அறிவிக்க வேண்டும் என தெரியும்.

Banerjee

அப்படி தோனி ஓய்வு பெற விரும்பினால் முறைப்படி பிசிசிஐ-க்கு தகவல் அளித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது ஓய்வை அறிவிப்பார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் போதும் அவர் இதைத்தான் செய்தார். எனவே சமூக வலைதளத்தில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் இது போன்ற விஷயங்கள் அவ்வப்போது சமூகவலைதளத்தில் பரவும் ஆனால் போலியானவை என விரைவிலேயே தெரிந்துவிடும்.

Banerjee 1

ஏன் இப்படிப்பட்டவர்கள் தோனியை குறி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவரை எனக்கு முழுமையாகத் தெரியும். ஓய்வுபெற வேண்டிய தருணம் வந்து விட்டால் அவர் நேராக அதனை அறிவிப்பார். இந்த வயதிலும் ஜோனி எவ்வளவு பிட்டான நபர் என்பதை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பார்ப்பீர்கள். ஒருவேளை அடுத்த ஆண்டுக்கு உலக கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டால் நிச்சயம் அதில் விளையாட தகுதி அவரிடம் உள்ளது என்று அவரது பயிற்சியாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement