சச்சின், சேவாக், கோலி…. கேரளா வெள்ளத்தினை பற்றிய நெகிழ்ச்சியான பதிவு

flood pray
- Advertisement -

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய – வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. அணைகள் அனைத்தும் நிரம்பியதால், 22 அணைகள் திறக்கப்பட்டன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ட்விட்டர் மூலமாக தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். மேலும் தங்களால் முடிந்த உதவிகளை மறைமுகமா செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்திய ஏ அணியின் வீரரான சாம்சன் “15 இலட்சம்” வெள்ள நிவாரண நிதியை கேரளா முதல்வரிடம் அளித்தது நாம் அறிந்ததே. இப்போது இந்த வெள்ள நிவாரண நிதிகள் பல இடத்தில் இருந்தும் வந்து கொண்டு இருக்கின்றன. கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டர்-ல் வெளியிட்ட தொகுப்புகளை இங்கு பதிவிட்டுளோம்.

வெள்ள நிவாரணத்துக்கு திரைப்பட கலைஞர், பொதுமக்கள்,மாநில அரசுகள்,அரசியல்வாதிகள் போன்றவர்கள் உதவ முன்வந்த நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர்களும் தங்களது பங்களிப்பை தருவதால் வெள்ள நிவாரணம் துரிதமாக நடைபெறும். கேரளா மக்கள் படும் துயர் எப்போது முடியும்.

Advertisement