நேற்றைய போட்டியில் தோனி ரசிகர்கள் செய்த செயலை கவனித்தீர்களா ? – வைரலாகும் புகைப்படம்

Dhoni-1

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடியதுக்கு பின்னர் இந்திய அணியில் இதுவரை விளையாடவில்லை மேலும் அவர் விளையாடுவது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. மேலும் கடந்த பல தொடர்களாக தோனி தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.

Dhoni

இருப்பினும் தோனி ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து தங்களது ஆதரவினை வழங்கி அவரின் வருகையை எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியின்போது தோனியின் ரசிகர்கள் செயல் செய்த செயல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தோனி கிரிக்கெட் விளையாடி 6 மாதங்களாகியும் அவரின் ரசிகர்கள் சற்றும் கூட மனதை தளர்த்தாமல் அவருக்காக பல்வேறு விடயங்களை செய்து வருகின்றனர். அதன்படி சென்ற ஆண்டு தோனி திருவனந்தபுரம் மைதானத்தில் விளையாடும் போது தோனிக்கு 30 அடி கட் அவுட் வைத்தனர் ஆனால் தற்போது அவர் அணியில் ஆடவில்லை என்றாலும் அவரின் உருவப்படத்தை 40 அடிக்கு காட்அவுட்டாக வைத்து பிரமாதப்படுத்தினர்.

மேலும் அந்த கட்அவுட்டிற்கு முன்பாக தோனி ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடியும் தோனியை ஆதரித்து கோஷங்களையும் எழுப்பினர். தோனி ரசிகர்களின் இந்த செயலும், தோனியின் அந்த கட்அவுட் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -