முன்னர் தோனி இப்போது மற்றும் ஒருவரை சேர்த்து பண்டை வெறுப்பேற்றும் இந்திய ரசிகர்கள் – வருத்தத்தில் பண்ட்

Pant

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஆன பண்ட் தனது பேட்டிங் மற்றும் பொறுப்பற்ற கீப்பிங் மூலம் ரசிகர்களிடம் அவ்வப்போது கலாய்க்கப்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரின் போது ஸ்டம்பிங் ஸ்டம்பிங் செய்யும்போது முன்கூட்டியே பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்ததால் அவரை இணையத்தில் ரசிகர்களின் கிண்டல் மற்றும் கேலிக்கு ஆளானார்.

Kohli-1

அதுமட்டுமின்றி ஒவ்வொரு முறை பண்ட் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் ஆகியவற்றை தவறவிடும்போது தோனி தோனி என்று மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை தொடர்ந்து சீண்டி வந்தனர். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த தொடருக்கு முன்பதாக ரசிகர்கள் யாரும் இது போன்று செய்ய வேண்டாமென்றும் அவரை ஆதரிக்கும் படியும் கோலி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் பண்ட் விக்கெட் கீப்பிங் சற்று தடுமாற்றம் தெரியவர நேற்றும் தோனி தோனி என்று ரசிகர்கள் மைதானத்தில் கூச்சலிட்டனர். இதனை கோலியும் நேற்று கவனித்து தனது அதிருப்தியை வெளியிட்டார் அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தோனி பெயரை மட்டும் அல்ல கேரள மாநிலத்தில் நேற்று போட்டி நடந்ததால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பெயரையும் சேர்த்து மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

samson

எனவே முன்பு தோனியை வைத்து பண்டை கிண்டல் செய்து வந்த ரசிகர்கள் தற்போது பண்டின் இடத்தை பிடிக்க தயாராகிவரும் சாம்சன் பெயரையும் சேர்த்து பண்டை கிண்டல் செய்து வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் இதுபோன்று செய்து வருவதால் உண்மையில் தற்போது பண்ட் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் என்றே கூறலாம்.

- Advertisement -