சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடவுள்ள சொதப்பல் மன்னன் கேதார் ஜாதவ் – எந்த அணிக்கு தெரியுமா ?

Jadhav-2
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த 13வது ஐபிஎல் தொடரும் இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எப்போது இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

அதற்கு முன்னதாக இந்தியாவை சேர்ந்த பல்வேறு உள்ளூர் மாநில அணிகள் கலந்துகொண்டு விளையாடும் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் தற்போது ஜனவரி 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இந்த உள்ளூர் டி20 தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு வீரர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது மகாராஷ்டிர மாநில அணி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்த அணியின் கேப்டனாக ராகுல் திருப்பாதி செயல்பட உள்ளார். மேலும் அந்த அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொதப்பல் மன்னனான கேதர் ஜாதவ் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி மற்றொரு தொடக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் மகாராஷ்டிரா அணிக்காக விளையாட உள்ளனர்.

Jadhav 1

இந்த தொடரில் விளையாட இருக்கும் பல்வேறு அணிகளும் குரூப் வரிசையாக பிரிக்கப்பட்டு தனி தனியாக விளையாட இருக்கின்றன. அதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணியும் கலந்துகொள்ள உள்ளது. இந்த அணியில் இருந்து முன்னணி வீரரான முரளி விஜய் சொந்த காரணங்கள் காரணமாக விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் இருக்கும் அந்த குறிப்பிட்ட பிரிவில் இருக்கும் அணியுடன் ஒரு குறிப்பிட்ட மைதானத்திலேயே விளையாடும். அந்த வகையில் தமிழ்நாடு அணி கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளும் கொல்கத்தாவில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

jadhav

இந்நிலையில் கடந்த ஐ.பி,எல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சொதப்பலாக விளையாடிய கேதர் ஜாதவ் இந்த சையது முஷ்டாக் அலி தொடரிலும் சொதப்புவார் என்று ரசிகர்கள் இப்போதே கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். மேலும் சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டு அவரை தேர்வு செய்யக்கூடாது என்றும் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கருத்துக்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement