அப்பாடா ஒருவழியா இவரை அணியில் இருந்து தூக்கிட்டாங்க. ரொம்ப நிம்மதி – ரசிகர்கள் மகிழ்ச்சி

IND-2
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று இந்தியா திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

Williamson-1

- Advertisement -

இந்த தொடர் வரும் 12ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஆறு மாதங்கள் காயத்தால் அணிகள் இடம் பெறாமல் தவித்து வந்த ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.அதேபோல நியூஸிலாந்து தொடருக்கு முன்பாக காயத்தின் காரணமாக விளையாடிக் கொண்டு விலகிய ஷிகர் தவான் மற்றும் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து தற்போது சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வு குழுவினர் இந்த அணியை தேர்வு செய்துள்ளனர்.

Jadhav

இவர்கள் தேர்வு செய்த அணியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான கேதார் ஜாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே அணியில் நீடிக்க வைக்கப்பட்டுள்ளார். இவர்களின் இந்த தேர்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த பல தொடர்களாகவே பேட்டிங்கில் சொதப்பி வரும் ஜாதவ் பந்துவீசுவதும் கிடையாது. அதனால் மனிஷ் பாண்டேவே சரியான தேர்வுதான் என்று ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மனிஷ் பாண்டே மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு திறமையும் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandey

அணி வீரர்கள் விவரம் : ஷிகார் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி, கே எல் ராகுல், மணிஷ் பண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்திப் யாதவ், சாஹல், சைனி மற்றும் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement