தோனி மட்டும் இல்லனா நான் இந்திய அணிக்காக விளையாடி இருக்க முடியாது – உருக்கமாக பேசிய இந்திய வீரர்

Jadhav-3
- Advertisement -

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் இந்திய கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்று வீரராக மறைமுகமாக அணியில் நுழைந்தவர் கேதர் ஜாதவ். கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியில் இடம்பிடித்து ஆடிவருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இவருக்கு அணிகள் இடம் கிடைத்தது. ஆனால் சமீப காலமாக அவரது ஆட்டம் மோசமாக உள்ளது. மேலும் இவரது இந்த மோசமான ஆட்டம் காரணமாக அடிக்கடி விமர்சனத்திலும் சிக்கி வருகிறார்.

Jadhav

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் மூன்று தொடர்களில் ஆடிய அவருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு மாற்று வீரராக பல வீரர்கள் வந்து விட்டனர். அவரின் இடத்திற்கு இளம் வீரர்கள் பலருக்குள் தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இப்படிப் பார்த்தால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று கருதலாம்.

இவர் இந்திய அணிக்கு 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுகுறித்து கேதார் ஜாதவ் கூறுகையில் : ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு சச்சின் டெண்டுல்கர் தான் ரோல்மாடல். அவருடன் விளையாடாமல் போனது வருத்தம் அளிக்கிறது. மேலும் அவருடன் ஓய்வறையில் இல்லாததை நான் தவறவிட்ட நிகழ்வாக கருதுகிறேன். எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என்று கூறினால் அது தோனி தான். அவரை முதலில் பார்த்தபோது அவர் தான் இந்தியாவின் கேப்டன்.

Jadhav

அவர் ரொம்ப கண்டிப்பானவர். நான் இந்திய அணிக்காக 10 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் தோனி எனக்கு தொடர்ந்து ஆதரவளித்தார். அவரைப் பார்த்தாலே எனக்கு நம்பிக்கை அதிகரித்து விடும். கேப்டனிடமிருந்து எனக்கு எவ்வளவு ஆதரவு தேவையோ அனைத்தும் எனக்கு கிடைத்தது.

நான் இவ்வளவு காலத்திற்கும் இந்திய அணியில் ஆடினேன் என்றால் அதற்கு டோனி தான் மிகப்பெரிய காரணம் என்று கூறியுள்ளார் கேதர் ஜாதவ். மேலும் தோனி இல்லை என்றால் அவர் இவ்வளவு நாட்கள் இந்திய அணிக்காக ஆடியிருக்க மாட்டார் என்பது முற்றிலும் உண்மைதான். சென்னை அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பின்னரே இந்திய அணியின் அப்போதைய கேப்டனான தோனியின் உதவியால் ஜாதவ் இந்திய அணிக்கு நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement