இனிமே இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காது. அவரே ரிட்டயர்டு ஆயிடலாம் – கட்டம் முடிந்த சீனியர் வீரர்

Ind

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்கிறது. நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த மொத்த அணியில் 31 பேர் இருக்கின்றனர்.

INDvsAUS

ஐபிஎல் தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தனி விமானத்தின் மூலம் செல்ல உள்ளனர். விராட் கோலி தலைமையிலான மூன்று வகையான இந்திய அணி வீரர்களும் ஒட்டுமொத்தமாக நவம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்று அடைகின்றனர்.

அதன் பின்னர் இவர்கள் அனைவரும் சிட்னி நகரில் உள்ள ஒரு தனி ஹோட்டலில் 14 நாட்களில் நாட்கள் தனிமைப் படுத்தப்பட உள்ளனர். அச்சமயத்தில் அந்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள மைதானத்தில் வீரர்கள் பயிற்சியிலும் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவிலை.

Kedar-Jadhav

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் ஒருநாள் அணியில் கேதர் ஜாதவ் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த உலக கோப்பை தொடரிலும் அவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரது ஆட்டம் இல்லை. மேலும் உலக கோப்பை தொடரில் இருந்து அவர் பவுலிங்கும் செய்வதில்லை இதன் காரணமாக இப்படி ஒரு ஆல்ரவுண்டர் அணிக்கு அவசியமா ? என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

Jadhav-3

மேலும் மேலும் அவரது சொதப்பல் ஆட்டம் ஐ.பி.எல் தொடரிலும் தொடர தற்போது ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்கள் பலர் இருக்கையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். தோனியின் தயவிலேயே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்ததாகவும் இனி அவர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பே இல்லை எனவும் அவர் ஓய்வை அறிவிப்பதே நல்லது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.