Worldcup : உலகக்கோப்பை அணியில் கேதார் ஜாதவ் இடம் குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட – பி.சி.சி.ஐ

இந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

Shastri
- Advertisement -

இந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பெற்றுள்ளார். ஆனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். அவருடைய தோள்பட்டையில் பீல்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது. அதனால் அவர் ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாட வில்லை மேலும் அவருக்கு ஓய்வு வேண்டும் என்று அணி நிர்வாகம் அறிவித்ததால் அவர் தொடரில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் உலக கோப்பை இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பிடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தொடர்ந்து பல நாட்களாக தீவிர சிகிச்சையின் கண்காணிப்பில் இருந்த ஜாதவ் தற்போது தோல்பட்டை காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார் எனவே அவர் இந்திய அணியில் இணைந்து இங்கிலாந்து செல்வதை இன்று இந்திய அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

Kedar-Jadhav

ஜாதவ் இதுவரை இந்திய அணிக்காக 59 போட்டிகளில் விளையாடி 1174 ரன்களை அடித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் 5 அரை சதங்களும் அடங்கும். அவர் ஸ்ட்ரைக்ரேட் 102, மேலும் 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement