தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை தர்மசாலா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

சுனில் ஜோஷி தலைமையிலான புதிய தேர்வுக் குழுவின் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த அணியில் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த தவான், புவனேஸ்வர் குமார், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்தனர்.
மேலும் இந்திய அணியின் சீனியர் வீரரான கேதர் ஜாதவ் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இனி கேதர் ஜாதவ் அணியில் இடம் பெறுவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இளம் வீரர்களின் வரவு இந்திய அணிக்கு பெருமளவு அதிகரித்துள்ளதால் கோலி இனி இவரை தேர்வுசெய்து நடக்காத விடயம் என்று கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து ஜாதவின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. ஆரம்ப கட்டங்களில் ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த ஜாதவ் அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டுமின்றி மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தார். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து அவர் அடிக்கடி காயம் ஏற்பட்டு மிகுந்த மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் அவர் மோசமாகவே செயல்பட்டார்.
இதன் காரணமாக 34 வயதாகும் இவர் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆல்-ரவுண்டராக அணியில் இடம்பெற்று வரும் இவர் கடந்த பல தொடர்களாக பந்துவீசாமலே விளையாடி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது பாண்டியா ஆல்ரவுண்டர் வரிசையில் இணைந்துள்ளதால் அவரை நிச்சயம் அணிக்குள் எடுத்தாக வேண்டும்.

மேலும் 34 வயதாகும் ஜாதவுக்கு மேலும் வாய்ப்புகளை கொடுப்பதை தவிர்த்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் இனி நிர்வாகம் முடிவு எடுக்கும் என்பதால் கிட்டத்தட்ட ஜாதவின் கதை முடிந்தது என்று கூறவேண்டும். மேலும் கோலியும் இனி அவரை தேர்வு செய்யமாட்டார். இனி அவர் உள்ளூர் போட்டி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



