கத்ரீனா கைப் உடனான கூச்சம்.! பேசுவதற்கு வெட்கப்பட இந்திய கிரிக்கெட்டர்..!

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டிற்கும் , பாலிவுட் சினிமாவிற்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து தான் வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல பேர் இந்தி நடிகைகளை காதலித்துள்ளனர். அதில் சிலரது காதல், திருமணத்திலும் முடிந்துள்ளது. இந்நிலையில் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப், தனது அபிமான கிரிக்கெட்டர் யார் என்று தெரிவித்துள்ளார்.

katrina

- Advertisement -

ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து கிரிக்கெட் மீதான மோகம் பாலிவுட் நடிகைகளிடம் அதிகம் காணப்படுகிறது. இந்தி நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்ற நடிகைகள் ஐபிஎல் தொடரில் தங்களது சொந்த அணியை வைத்துள்ளனர்.

கடந்த ஐபிஎல் தொடர்களில் இந்தி நடிகையான கத்ரினா கைப் பெங்களூரு ராயல் சலாங்கர்ஸ் அணியின் ஒரு பரம ரசிகையாக இருந்து வருகிறார். ஐபிஎல் தொடர் தொடங்கிய முதல் 3 வருடங்கள் அவர் பெங்களூரு அணி விளையாடிய போட்டிகளில் தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.

rahul-dravid

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனா தனது அபிமானமான கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் தான் என்று தெரிவித்துளளார். இதுகுறித்து அவர் பேசுகையில் ‘எனக்கு ராகுல் டிராவிட் என்றால் மிகவும் பிடிக்கும், அவர் ஒரு ஜென்டில் மேன். அவர் எப்போதும் கோவமடையமாட்டார். நான் அவரிடம் ஒரு முறை பேசிய போது,நான் மூன்று வார்த்தைதான் பேசினேன். அவர் அந்த அளவிற்கு வெட்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement