கூலான தல தோனி கடைசி பந்தை கண்ணை மூடி பார்க்காமல் கடைசியில் அழுதது ஏன்? பின்னணியை பகிர்ந்த காசி விஸ்வநாதன்

Dhoni-and-Jadeja
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற தன்னுடைய பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனையும் சமன் செய்தது. குறிப்பாக அத்தொடரின் ஆரம்பம் முதலே சொல்லி அடித்து வந்த நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்தை அதன் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் வீழ்த்திய சென்னை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்த போட்டியில் குஜராத் 15 ஓவரில் 171 ரன்களை துரத்திய சென்னைக்கு ருதுராஜ், டேவோன் கான்வே, ரகானே என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி முக்கிய ரன்களை எடுத்தனர். அதே போல ஆரம்பத்தில் தடுமாறிய துபே முக்கிய நேரத்தில் ரசித் கான் ஓவரில் சிக்சர்களை அடித்த நிலையில் மோஹித் சர்மா வீசிய 13வது ஓவரில் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட ராயுடு அழுத்தத்தை உடைத்து அவுட்டானார். அதனால் வெற்றியை நெருங்கிய சென்னைக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது துல்லியமாக வீசிய மோஹித் சர்மா மிகப்பெரிய சவாலை கொடுத்தார்.

தோனியின் ஆனந்த கண்ணீர்:
இருப்பினும் சில இன்ச்கள் யார்கர் லென்த்தை தவற விட்ட 5வது பந்தை ரவீந்திர ஜடேஜா சிக்ஸராக அடித்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அனைவரும் கடைசி பந்தில் என்ன நடக்கப் போகிறது என்று இதயம் வேகமாக துடிக்க பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு முந்தைய சில ஓவர்களில் முக்கிய நேரத்தில் கோல்டன் டக் அவுட்டாகிபின்னடைவை ஏற்படுத்தி சென்ற தோனி அதைப் பார்க்க தைரியம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

ஆனால் கடைசி பந்தில் ஃபைன் லெக் பகுதியில் பவுண்டரியை திறக்க விட்ட ஜடேஜா அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்த பின்பே தோனி கண்ணை திறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதை விட அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கி வெறித்தனமாக கொண்டாடி மைதானத்தை சுற்றி தம்மிடம் வந்த ஜடேஜாவை தம்முடைய இடுப்பில் தூக்கி வைத்து கட்டிப்பிடித்து பாராட்டிய தோனி கண்ணை மூடிக்கொண்டு அழுதது தெளிவாக தெரிந்தது. பொதுவாகவே கூலாக இருக்கக்கூடிய அவர் அந்த சமயத்தில் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை பார்க்காத ரசிகர்களும் நெகிழ்ச்சியடைந்து போனார்கள்.

- Advertisement -

இந்நிலையில் 2019 ஐபிஎல் ஃபைனலில் 1 ரன்னில் தவற விட்டது போல அந்த போட்டியிலும் கோல்டன் டக் அவுட்டானதால் நூல் இலையில் வெற்றி பறிபோய் விடுமோ என தமக்கு தாமே கோபத்தில் இருந்த தோனி மற்றொரு தோல்வியை பார்க்க விரும்பாததாலேயே கண்ணை மூடி அமர்ந்திருந்ததாக காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் அப்படி கை மீறிப்போன வெற்றியை சாத்தியமாகிய காரணத்தாலேயே ஜடேஜாவை இடுப்பில் தூக்கி பாராட்டியதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

MS Dhoni Jadeja

“தோனி அப்படி ரியாக்சன் கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராயுடுவின் போராட்டத்திற்கு பின் 16 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் கோல்டன் அவுட்டான காரணத்தால் அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். அதாவது இன்னும் சிறிது நேரம் களத்தில் இருந்தால் வெற்றி பெற வைத்திருக்கலாமே என்று அவர் நினைத்தார். குறிப்பாக சீசன் முழுவதும் கடுமையாக போராடி வெற்றியை நெருங்கிய நாம் மீண்டும் ஒரு கோப்பையை அருகில் வந்து விடப் போகிறோம் என்று அவர் நினைத்தார்”

- Advertisement -

“இருப்பினும் தரமான ஜடேஜா களத்தில் இருந்ததால் நாங்கள் அனைவரும் வெற்றியை நம்பினோம். 2 பந்துகளில் 10 ரன்கள் என்பது மிகவும் கடினமாகும். ஆனால் அந்த சமயத்தில் ஜடேஜா முதல் பந்தில் சிக்சர் அடித்த ஷாட் எளிதானதல்ல. அந்த சிக்ஸருக்கு பின்பே அனைவரிடமும் நம்பிக்கை ஏற்பட்டது. ஏனெனில் கடைசி பந்தை வீசப்போகும் பவுலர் மீது நிச்சயமாக அழுத்தம் இருக்கும்”

kasi

இதையும் படிங்க:சமீபத்தில் நான் பாத்த மேட்ச்லயே இதுதான் பெஸ்ட். ஆஹா ஒஹோன்னு பாராட்டிய – விரேந்தர் சேவாக் (வைரலாகும் பதிவு)

“மோஹித் சர்மா முதல் 4 பந்துகளில் சிறப்பாக செயல்பட்டும் 5வது யார்கர் பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டதால் அழுத்தத்திற்கு உள்ளானார். அதனால் லெக் சைட் திசையில் அவர் வீசிய பந்தை ஜடேஜா அடித்தது சென்னையின் கனவை நினைவாக்கியது. அதனாலேயே தோனி அப்படி தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தயிருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement