எங்க கேப்டன் மட்டும் இதுக்கு ஓகே சொல்லியிருந்தா இந்தியாவை தோக்கடிச்சிருப்போம் – இலங்கை வீரர் புலம்பல்

Karunaratne
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஒரு வாய்ப்பு இருந்தது என்றும் அதை தவற விட்டு விட்டோம் என்றும் இலங்கை அணியின் வீரர் கருணரத்னே தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : எங்களது அணி வீரர்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது ஆனால் அதனை பெரிய இன்னிங்ஸ் ஆக மாற்ற முடியவில்லை. நாங்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாட முயற்சித்தும் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் எங்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் 42 ஓவரின் போது அல்லது 43-வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே எடுக்கலாமா என்றும் சில பெரிய ஷாட்டுகளை விளையாடுவோமா என்றும் கேப்டனிடம் கேட்டேன். அவர் 45-வது ஓவர் வரை பொறுமையாக காத்திருங்கள் என்று கூறிவிட்டார். நாங்கள் மட்டும் கிடைத்த துவக்கத்தை சரியாக பயன்படுத்தி பெரிய ஸ்கோரை அடித்து இருந்தால் நிச்சயம் எங்களால் இந்திய அணியை வீழ்த்தி இருக்க முடியும்.

chahal

எங்களது அணியால் 300 முதல் 350 ரன்கள் வரை அடிக்க முடியும் அதனை நாங்கள் இந்த போட்டியில் தவறவிட்டு விட்டோம் ஆனால் அடுத்த போட்டியில் நிச்சயம் எடுப்போம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : இந்திய அணிக்கு எதிராக பந்துவீசும் போது அதிகமாக டாட் பால்களை வீச முயற்சித்தோம். ஆனால் இந்திய அணி எங்களை சிறப்பாக எதிர்த்து விளையாடி விட்டார்கள்.

பவர் பிளேவில் ஒரு விக்கெட்டை மட்டுமே எங்களால் எடுக்க முடிந்தது. மேலும் சில விக்கெட்டுகளை நாங்கள் கைப்பற்றி இருந்தால் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை வீழ்த்திருக்க முடியும் என கருணரத்னே புலம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement