முச்சதம் அடித்தும் என்னை அணியில் இருந்து நீக்கினார்கள். இளம் வீரர் வேதனை – விவரம் இதோ

Karun-1
- Advertisement -

மும்பையில் தற்போது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டின் நான்காவது சுற்று நடந்து முடிந்துள்ளன. கடந்த 3 ஆம் தேதி துவங்கி 6 ஆம் தேதி வரை நடந்த போட்டியில் கர்நாடக மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டிக்கான கர்நாடக அணியிலிருந்து துவக்க வீரர் மயங்க் அகர்வால்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

vijay

- Advertisement -

ஏனெனில் அவர் நியூசிலாந்து பயணத்திற்கான இந்திய ஏ அணியில் அகர்வால் இடம் பெற்றிருப்பதால் இந்த போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய கர்நாடக அணியின் கேப்டன் கருண் நாயர் கூறியதாவது : எங்கள் அணியில் அகர்வால் மிகவும் முக்கியமான வீரர்.

பலம்வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக அவர் எங்கள் அணியுடன் இணைந்து இல்லாதது எங்களுக்கு சற்று பின்னைடைவு தான் என்றாலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதால் சற்று ஆறுதலாக இருக்கிறது. அவர் இந்திய அணிக்கு விளாயாடுவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அகர்வால் எப்போதும் கடினமான பயிற்சியை மேற்கொள்வார்.

Karun

பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் தான் விளையாடாதது குறித்து வருத்தம் தெரிவித்து கருண் நாயர் கூறியதாவது : இந்திய அணியில் நான் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பின் விளையாடவில்லை. எனக்கு டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். தற்போது எனது கவனம் முழுவதும் கர்நாடக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஞ்சிக் கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே என்று வருத்தத்துடன் பேட்டியளித்தார்.

karun

கருண் நாயர் கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். மேலும் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் முச்சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. சேவாக்கிற்கு பிறகு முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை அவர் வைத்திருந்த போதும் சிறப்பாக விளையாடியபோதும் அணியில் இருந்து அப்போது கழட்டி விடப்பட்டது அப்போது அதிர்ச்சி ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement