- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3148 நாட்கள் கழித்து கடைசி வாய்ப்பில் சாதித்த கருண் நாயர்.. பாராட்டிய ரூட்.. இங்கிலாந்தை திருப்பி அடிக்குமா இந்தியா?

இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மீண்டும் 2 ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த ராகுல் 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் 21 ரன்கள் குவித்த கேப்டன் கில் தேவையின்றி ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இந்தியா அசத்துமா:

அடுத்த சில ஓவர்களில் சாய் சுதர்சனும் 38 ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கி சென்றார். அதனால் 123/5 என இந்தியா தடுமாறிய போது கருண் நாயர் களமிறங்கி நிதானமாக விளையாடினார். அவருடன் எதிர்ப்புறம் கை கொடுக்க முயற்சித்த துருவ் ஜுரேல் 19 ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய கருண் நாயர் நங்கூரமாக விளையாடினார். எதிர்ப்புறம் வந்த வாஷிங்டன் சுந்தர் அவருக்கு நிதானமாக விளையாடி கை கொடுத்தார். இறுதியில் மழையால் பகுதியளவு பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியா 204/6 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

3148 நாட்கள் கழித்து:

பிட்ச் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருப்பதால் இங்கிருந்து இந்தியா சிறப்பாக விளையாடி 300 ரன்களை தாண்டினால் மட்டுமே பந்து வீச்சில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றே சொல்லலாம். களத்தில் கருண் நாயர் 52*, சுந்தர் 19* ரன்களுடன் உள்ளனர். குறிப்பாக கருண் நாயர் 3148 நாட்கள் 8 வருடங்கள் கழித்து ஒரு வழியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 2017 ஐபிஎல் போல.. வெறும் 1 ரன்னில் ஆஸியை வீட்டுக்கு அனுப்பிய தெ.ஆ.. த்ரில்லாக ஃபைனல் சென்றது எப்படி?

2016 இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் சென்னையில் சேவாக்கிற்கு பின் முச்சதத்தை அடித்து சாதனைப் படைத்தார். அதன் பின் அரை சதம் கூட அடிக்காததால் கழற்றி விடப்பட்ட அவர் 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தும் முதல் 3 போட்டிகளில் தடுமாறினார். அதனால் கழற்றி விடப்பட்ட அவருக்கு இந்தப் போட்டியே கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அந்த கடைசி வாய்ப்பில் அரை சதத்தை அடித்துள்ள அவரை நாளின் முடிவில் ஜோ ரூட் பாராட்டினார். இந்த வாய்ப்பை உறுதியாக்க கருண் நாயர் சதத்தை அடிப்பது அவசியமாகிறது.

- Advertisement -