அவரின் கடின உழைப்பின் காரணமாகவே அவர் இன்று இந்திய அணியில் விளையாடுகிறார். இளம் வீரரை புகழ்ந்த – கருண் நாயர்

Karun

மும்பையில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டின் நான்காவது சுற்று நேற்று ஆரம்பித்தது. இந்த போட்டியில் கர்நாடக மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான கர்நாடக அணியிலிருந்து துவக்க வீரர் மயங்க் அகர்வால்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

vijay

ஏனெனில் அவர் நியூசிலாந்து பயணத்திற்கான இந்திய ஏ அணியில் அகர்வால் இடம் பெற்றிருப்பதால் இந்த போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய கர்நாடக அணியின் கேப்டன் கருண் நாயர் கூறியதாவது : எங்கள் அணியில் அகர்வால் மிகவும் முக்கியமான வீரர்.

பலம்வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக அவர் எங்கள் அணியுடன் இணைந்து இல்லாதது எங்களுக்கு சற்று பின்னைடைவு தான் என்றாலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதால் சற்று ஆறுதலாக இருக்கிறது. அவர் இந்திய அணிக்கு விளாயாடுவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அகர்வால் எப்போதும் கடினமான பயிற்சியை மேற்கொள்வார்.

agarwal 1

அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக தான் தற்போது அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரின் கடின உழைப்பு நிச்சயம் அவருக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். அவரின் ஆட்ட திறனையும் அவரின் முன்னேற்றத்தையும் நாங்கள் பல நாட்களாக பார்த்து வந்தோம். அவருக்கான இடம் இந்திய அணியில் தொடரும் என்றும் கருண் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -