IND vs WI : 4 ஆவது இடத்திற்கு விஜய் ஷங்கரும் வேலைக்காகாது. பண்டும் வேலைக்காகாது – முன்னாள் பயிற்சியாளர்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Shankar
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இந்திய அணியின் 4 ஆவது நிலை வீரர் குறித்து முன்னாள் பயிற்சியாளரான அனுஷ்மான் கெய்க்வாட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி நான்காவது வீரராக கேதர் ஜாதவ் சரியாக இருப்பார் ஏனெனில் அவர்கள் புத்திசாலி தரமான வீரர். விரைவாக ரன்களை சேகரிப்பதில் சிறந்தவர் அவர் நான்காவது வரிசைக்கு பொருத்தமாக இருப்பார். அதோடு அவர் மட்டும் இன்றி தினேஷ் கார்த்திக்கும் அந்த இடத்திற்கு பயன்படுத்தலாம். ஏனெனில் தினேஷ் கார்த்திக் ஒரு அனுபவ வீரர். போட்டியை சிறப்பாக முடிப்பதில் வல்லவர் அதனை அவர் நிரூபித்திருக்கிறார்.

Karthik

இந்திய அணி நெருக்கடியான நிலையில் இருந்தால் நேரம் எடுத்துக்கொண்டு இறுதியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர். விராட் கோலி ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு துணையாக நின்று ஆடவும் அவர் அவசியமாக இருப்பார். பண்ட் நன்றாக விளையாடக் கூடியவர் என்றாலும் அவசரப் படாமல் பொறுமையாக ஆடுவது முக்கியமாகும். எனவே இந்த விடயத்தில் விஜய் சங்கர், பண்ட் ஆகியோரைக் காட்டிலும் தினேஷ் கார்த்திக் சிறந்த வீரர் என்று அவர் கூறினார்.

Advertisement