தினேஷ் கார்த்திக் மட்டும் கரெக்டா தூக்கிட்டீங்க. ஆனா இவரை சேர்த்து இருக்கீங்க. என்னங்க உங்க கணக்கு – விவரம் இதோ

Karthik
- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று மும்பையில் அறிவிக்கப்பட்டது. இதில் இம்முறை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றுக்கும் தனித்தனி அணி அறிவிக்கப்பட்டது.

Jadhav

- Advertisement -

இதில் மூன்று வடிவ தொடருக்கும் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். டெஸ்ட் தொடரில் சிலரும் ஒருநாள் டி20 தொடரில் சிலரும் அறிமுக போட்டிகளுக்கான வாய்ப்பை பெற்றனர்.

இந்த தொடரில் உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடாத மற்றும் வயதில் மூத்த வீரர்களான கார்த்திக் மற்றும் ஜாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. அதன்படி தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதேவேளையில் ஜாதவ் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Kedar-Jadhav

இதனை கண்ட ரசிகர்கள் கார்த்திக் மற்றும் ஜாதவ் இருவருமே சரியாக விளையாடவில்லை. அதில் கார்த்திக்கை மட்டும் அணியிலிருந்து நீக்கி விட்டீர்கள். இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் கார்த்திக்கை நீக்கிய நீங்கள் சிறப்பாக விளையாடாமல் இருந்தும் ஜாதவை அணியில் சேர்ப்பது ஏன் அவரும் வயது மூத்த வீரர் தானே என்று கேள்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்திய அணி நிர்வாகம் என்ன பதில் வைத்திருக்கிறது என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

Advertisement